கர்நாடகாவில் நாளை 24 புதிய அமைச்சர்கள் பதவியேற்க இருக்கிறார்கள்
செய்தி முன்னோட்டம்
கர்நாடக முதல்வர் சித்தராமையா தலைமையிலான அமைச்சரவையில் மேலும் 24 அமைச்சர்கள் நாளை(மே 26) பதவியேற்பார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் மற்றும் கட்சியின் மூத்த தலைவர்கள் இணைந்து புதிய அமைச்சர்களின் பெயர்களை முடிவு செய்தனர்.
முதல்வர் சித்தராமையா இன்று ராகுல் காந்தியை சந்தித்து இது குறித்து பேசுவார் என்று கூறப்படுகிறது.
மே 20 அன்று சித்தராமையா முதலமைச்சராகவும், மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் துணை முதல்வராகவும் பதவியேற்றனர்.
அவர்களுடன் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவின் மகன் பிரியங்க் கார்கே உட்பட 8 எம்எல்ஏக்கள் அமைச்சர்களாக பதவி ஏற்றனர்.
ஆனால், இதுவரை அவர்களுக்கான இலாகாக்கள் ஒதுக்கீடு செய்யப்படவில்லை.
details
லிங்காயத் சமூகத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று கூறப்படுகிறது
பல்வேறு சமூகங்களை சமநிலைப்படுத்தி பிரதிநிதித்துவப்படுத்த வேண்டும் என்பதால், அமைச்சர்களின் பட்டியலை உருவாக்குவது அல்லது இலாகாக்களை ஒதுக்கீடு செய்வது காங்கிரஸுக்கு ஒரு கடினமான வேலையாக இருக்கும்.
மாநிலத்தில் அரசியல் ரீதியாக மிக முக்கியமான சமூகமாக லிங்காயத்துகள் கருதப்படுகிறார்கள்.
லிங்காயத் சமூகத்தை சேர்ந்த முதல்வர் பதவியேற்கவில்லை என்பதால், அந்த சமூகத்தைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்களுக்கே அமைச்சர் பதவிகள் கிடைக்கும் என்று கூறப்பட்டு வருகிறது.
அடுத்த ஆண்டு பொதுத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தேர்தலுக்கு முன்பு காங்கிரஸ் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டிய கட்டாயம் காங்கிரஸ் கட்சிக்கு உள்ளது.
கர்நாடகாவில் இருந்து 28 எம்பிக்கள் லோக்சபாவிற்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்பதால், கர்நாடக மாநிலம் ஒரு முக்கிய தேர்தல் களமாக கருதப்படுகிறது.