LOADING...
'இஸ்ரேல் போர்நிறுத்தத்திற்கு ஆதரவாக இந்தியா வாக்களிக்கவில்லை என்பது வெட்கக்கேடானது': பிரியங்கா காந்தி 
இந்திய அரசின் இந்த முடிவுக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

'இஸ்ரேல் போர்நிறுத்தத்திற்கு ஆதரவாக இந்தியா வாக்களிக்கவில்லை என்பது வெட்கக்கேடானது': பிரியங்கா காந்தி 

எழுதியவர் Sindhuja SM
Oct 28, 2023
02:27 pm

செய்தி முன்னோட்டம்

இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே நடந்து வரும் போரை நிறுத்துவதற்கு ஐநா பொதுச் சபையில்(UNGA) நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு வாக்களிக்காமல் இந்தியா விலகியிருப்பது தனக்கு அதிர்ச்சியையும், அவமானத்தையும் அளிப்பதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வத்ரா தெரிவித்துள்ளார். இஸ்ரேல்-ஹமாஸ் மோதலில் உடனடியாக மனிதாபிமான போர்நிறுத்தம் செய்ய வேண்டும் என்று கோரி ஜோர்டான் ஒரு வரைவுத் தீர்மானத்தை ஐநா பொதுச் சபையில் சமர்ப்பித்திருந்தது. இந்நிலையில், இதற்கான வாக்கெடுப்பு நேற்று நடத்தப்பட்டது. ஆனால், இந்த தீர்மானத்தில் ஹமாஸ் பயங்கரவாதக் குழுவைப் பற்றி எதுவும் குறிப்பிடாததால், இந்தியா இந்த வாக்கெடுப்பில் பங்குபெற மறுத்துவிட்டது. காசா பகுதிக்கு உதவிகள் வழங்கப்பட வேண்டும் மற்றும் பொதுமக்களுக்கு பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் எனவும் இந்த தீர்மானத்தில் கோரப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

டக்ஜ்வ்

இஸ்ரேலை ஆதரிப்பது இந்தியாவின் கொள்கை அல்ல': சரத் பவார்

ஆனால், இதற்காக நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாமல் இந்தியா விலகிவிட்டது. இதனையடுத்து, இந்திய அரசின் இந்த முடிவுக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. "மனிதகுலத்தின் ஒவ்வொரு சட்டமும் தூள் தூளாக்கப்படுவதை எந்த முடிவும் எடுக்காமல் அமைதியாகப் பார்த்துக் கொண்டிருப்பது, நம் நாடு இத்தனை காலமாக பின்பற்றி வந்த கொள்கைகளுக்கு எதிரானது" என்று பிரியங்கா காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார். இது குறித்து பேசியிருக்கும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார், "பாலஸ்தீன விவகாரத்தில் இந்திய அரசிடம் குழப்பம் நிலவுகிறது. முந்தைய அரசாங்கங்களில் இதுபோன்ற குழப்பத்தை நான் பார்த்ததே இல்லை. வரலாற்றின்படி, இந்தியாவின் கொள்கை எப்போதும் பாலஸ்தீனத்தை ஆதரிப்பதே தவிர இஸ்ரேலை அல்ல." என்று கூறியுள்ளார்.

ட்விட்டர் அஞ்சல்

பிரியங்கா காந்தி தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: