ஜார்க்கண்டில் பயணிகள் ரயிலின் 18 பெட்டிகள் தடம் புரண்டது; மீட்பு பணிகள் தீவிரம்
செவ்வாய்க்கிழமை அதிகாலை ஜார்க்கண்டில் ஹவுரா-சிஎஸ்எம்டி எக்ஸ்பிரஸ் பயணிகள் ரயிலின் 18 பெட்டிகள் தடம் புரண்டன. இந்தியா டுடே செய்திகளின்படி, சக்ரதர்பூர் அருகே உள்ள பாரா பாம்பு கிராமத்தில் நடந்த இந்த விபத்தில் 6 பேர் காயமடைந்தனர். விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் ஆம்புலன்ஸ் மற்றும் மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த அதிகாரி ஒருவர், இதுவரை உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்றார். மேலும், தடம் புரண்டதற்கான காரணம் கண்டறியப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார். இதனை தொடர்ச்சியாக அப்பகுதியில் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. ஹவுரா-கந்தபாஞ்சி இஸ்பாட் எக்ஸ்பிரஸ் (22861), காரக்பூர்-தன்பாத் எக்ஸ்பிரஸ் மற்றும் ஹவ்ரா-பார்பில் எக்ஸ்பிரஸ் ஆகியவை ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.