சென்னையில் பெண் வாக்காளர்களுக்காக 16 இடங்களில் பிரத்தியேக 'பிங்க் பூத்'!
சென்னையில் நாளை பெண் வாக்காளர்களின் வசதியாக 16 இடங்களில் பிரத்தியேகமான பிங்க் நிற வாக்கு சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கே கர்ப்பிணிகள், வயது முதிர்ந்தவர்கள் மற்றும் கைக்குழந்தையுடன் வரும் தாய்மார்களுக்கு தனி வரிசை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, அவர்கள் ஓய்வெடுக்கவும், அமரவும் இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. குழந்தைகள் விளையாட இடம் மற்றும் வாக்கு சாவடிக்குள் செல்வதற்கு சாய்தளமும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இங்கு பணியாற்றும் அனைத்து தேர்தல் அலுவலர்கள், ஊழியர்கள் மற்றும் காவல்துறையினரும் பெண்டிரே! இது பெண்களுக்கான பிங்க் வாக்கு சாவடியாக இருந்தாலும், இங்கு அனைவரும் வாக்களிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
'பிங்க் பூத்' என்றால் என்ன?
#Watch | PINK வாக்குச்சாவடி மையங்கள் என்றால் என்ன? அதன் முக்கிய அம்சங்கள் என்ன? -தெளிவாக விளக்கும் தேர்தல் அதிகாரி ராதாகிருஷ்ணன்#SunNews | #ElectionsWithSunNews | #PINKBooth | #Chennai pic.twitter.com/ugGUavOjPF— Sun News (@sunnewstamil) April 18, 2024