Page Loader
ராஜஸ்தானில் மஹாசிவராத்திரி ஊர்வலம்: மின்சாரம் தாக்கி 14 குழந்தைகள் படுகாயம்
உயர் அழுத்தம் கொண்ட மின்கம்பியில் ஏற்பட்ட உராய்வினால் மின்சாரம் தாக்கியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது (மாதிரி புகைப்படம்)

ராஜஸ்தானில் மஹாசிவராத்திரி ஊர்வலம்: மின்சாரம் தாக்கி 14 குழந்தைகள் படுகாயம்

எழுதியவர் Venkatalakshmi V
Mar 08, 2024
06:19 pm

செய்தி முன்னோட்டம்

ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் இன்று நடைபெற்ற மஹாசிவராத்திரி ஊர்வலத்தின் போது, 14 குழந்தைகள் உயர் அழுத்த மின்சாரம் தாக்கி படுகாயம் அடைந்துள்ளனர். இதில், இருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறை நடத்திய விசாரணையில், உயர் அழுத்தம் கொண்ட மேல்நிலை மின்கம்பியில் ஏற்பட்ட உராய்வினால் மின்சாரம் தாக்கியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. காயமடைந்த 14 குழந்தைகளில் ஒரு குழந்தைக்கு 100 சதவீத தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளது எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். அந்த குழந்தைக்கு சிகிச்சை வழங்க சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மற்ற குழந்தைகள் 50 சதவிகிதம் காயம் அடைந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். இந்த சம்பவத்தில் அப்பகுதியில் உள்ள மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

embed

14 குழந்தைகள் படுகாயம்

Dinamani | ராஜஸ்தானில் மகா சிவராத்திரி ஊர்வலத்தில் விபத்து 14 குழந்தைகள் காயம்!#Rajasthan #kota #Mahashivratri #MahaShivaratri மேலும்: https://t.co/kNdi0tYUTb pic.twitter.com/Wb53u9kanA— தினமணி (@DinamaniDaily) March 8, 2024