
மாணவர்கள் கவனத்திற்கு, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் முன்கூட்டியே வெளியாகிறது
செய்தி முன்னோட்டம்
12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணிகள் நிறைவடைந்த நிலையில், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடையே தேர்வு முடிவுகள் குறித்து எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்தாண்டு 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 9ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது ஒரு நாள் முன்னதாக மே 8ஆம் தேதியே முடிவுகள் வெளியாகும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
எனினும், 10 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் மே 19ஆம் தேதி வெளியாகலாம் என கூறப்படுகிறது.
இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு எதிர்பார்க்கப்படுகிறது.
தேர்வு முடிவுகள் வெளியானவுடன், மாணவர்கள் தமிழ்நாடு அரசுத் தேர்வுகளின் அதிகாரப்பூர்வ இணையதளங்களான tnresults.nic.in மற்றும் dge.tn.gov.in ஆகியவற்றில் தங்களது பதிவு எண் மற்றும் பிறந்த தேதியைப் பதிவிட்டு முடிவுகளை அறியலாம்.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
#BREAKING | 12ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவர்கள் கவனத்திற்கு!#SunNews | #12thResults | #BoardExams | #TNGovt pic.twitter.com/gnbl5PXezz
— Sun News (@sunnewstamil) May 6, 2025