
1206: ராசியான நம்பர் என கருதிய முன்னாள் குஜராத் முதல்வர், அதே தேதியில் உயிரிழந்த சோகம்!
செய்தி முன்னோட்டம்
நேற்று ஜூன் 12 அன்று விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தில் பயணித்த 242 பயணிகளில் ஒருவரான குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி விபத்தில் உயிரிழந்தார் என்று குஜராத் பாஜக தலைவர் சி.ஆர். பாட்டீல் உறுதிப்படுத்தினார்.
போயிங் ரக விமானம் AI 171 அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விபத்துக்குள்ளானது.
சுவாரஸ்யமாக, முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி எண் கணிதத்தில் தீவிர நம்பிக்கை கொண்டவர்.
1206-ஐ தனது அதிர்ஷ்ட எண்ணாகக் கருதினார்.
அதனால் அவரது அனைத்து வாகனங்களின் பதிவு எண் 1206 ஆகும்.
இருப்பினும், வியாழக்கிழமை, விதியின் கொடூரமான திருப்பத்தில், அவரது அதிர்ஷ்ட எண் அவரைக் காப்பாற்ற முடியவில்லை.
உண்மையில், அது அவருக்கு துரதிருஷ்டமாக மாறி அவரை பலி கொண்டது.
விவரங்கள்
எதேச்சையாக நடந்த விபத்து விஜய் ரூபானியின் துரதிருஷ்டமாக மாறிய கொடூரம்
விஜய் ரூபானியின் இரு சக்கர வாகனம் கூட 1206 என்ற எண்ணைக் கொண்டுள்ளது.
நேற்றும் கூட விமானத்தில் ரூபானியின் இருக்கை எண் 12, அவர் மதியம் 12:10 மணிக்கு தான் விமானத்தில் ஏறினார்.
ஜூன் 12 (12-06) அன்று விமானம் விபத்துக்குள்ளானது எதேச்சையாக நடந்ததா அல்லது விதியின் விளையாட்டா?
விஜய் ரூபானி லண்டனில் உள்ள தனது மகள் வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தார்.
தகவல்களின்படி, ரூபானியின் மனைவி அஞ்சலி கடந்த பல நாட்களாக லண்டனில் இருந்தார்.
தற்போது அவரை அழைத்துவரவே ரூபானி லண்டனுக்கு பயணப்பட்டார்.
விஜய் ரூபானி, குஜராத்தின் 16வது முதல்வராக ஆகஸ்ட் 2016- செப்டம்பர் 2021 வரை பணியாற்றினார்.
2014-2016 வரை போக்குவரத்து, தொழிலாளர் மற்றும் நீர் வழங்கல் துறை அமைச்சராகவும் பணியாற்றினார்.