
மண்ணுக்குள் மறைத்துவைக்கப்பட்ட 1180 மதுபாட்டில்கள் பறிமுதல் - 9 பேர் கைது
செய்தி முன்னோட்டம்
புதுச்சேரி-காரைக்கால் பகுதியிலிருந்து தமிழ்நாடு-நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு மதுபாட்டில்கள் மற்றும் சாராயம் கடத்தி விற்பனை செய்யப்படுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளது.
இதனை கட்டுப்படுத்த மாவட்ட காவல்துறை பல்வேறு இடங்களில் சோதனை சாவடிகள் அமைத்து மது கடத்தலை கட்டுப்படுத்த கைது நடவடிக்கைகளை எடுத்து வந்தாலும், நூதன முறையில் கடத்தல்கள் தொடர்ந்து நடந்து கொண்டு தான் உள்ளது.
அதன்படி நாகை மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் காவல்துறை அதிரடி சோதனை நடத்தியது.
அப்போது நாகை நல்லியான் தோட்டம், வடக்குப்பொய்கை நல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் புதுச்சேரி காரைக்கால் பகுதியிலிருந்து கடத்தி வரப்பட்ட மதுபாட்டில்கள் மண்ணுக்குள் புதைத்து மறைத்து வைத்திருப்பது கண்டறியப்பட்டது என்று செய்திகள் வெளியாகியுள்ளன.
இதனைத்தொடர்ந்து மண்ணுக்குள் புதைத்து வைத்திருந்த 1180 மது பாட்டில்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
மது
மதுபாட்டில்கள் கடத்தலில் ஈடுபடுவோர் மீது குண்டர் சட்டம் பாயும் - காவல் கண்காணிப்பாளர்
தொடர்ந்து இந்த கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட 6 மூதாட்டிகள் உள்ளிட்ட 9 பேரினை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
மேலும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனம் ஒன்றையும் அவர்களிடம் இருந்து காவல்துறை பறிமுதல் செய்துள்ளது என்று கூறப்படுகிறது.
இதன் பின்னர் நாகை வெளிபாளையம் காவல்நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட மது பாட்டில்களை காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங், துணை காவல் கண்காணிப்பாளரான பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் பார்வையிட்டுள்ளனர்.
அதன் பின்னர் இந்த விவகாரம் குறித்து காவல் கண்காணிப்பாளரான ஹர்ஷ் சிங் பேசுகையில், இதுபோன்ற வெளிமாநில மது பாட்டில்கள் கடத்தலை தடுக்க தீவிர கண்காணிப்பில் ஈடுபடும்படி காவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது' என்றும்,
'இது போன்ற குற்றங்களில் ஈடுபடுவோர் மீது குண்டர் சட்டம் பாயும்' என்று எச்சரிக்கையும் விடுத்தது குறிப்பிடத்தக்கது.
ட்விட்டர் அஞ்சல்
கடத்தல் மது பாட்டில்கள்
#WATCH | காரைக்காலில் இருந்து கடத்தி வரப்பட்ட மதுபாட்டில்கள் பறிமுதல்!#SunNews | #Karaikal pic.twitter.com/MWph1ZgLDX
— Sun News (@sunnewstamil) October 10, 2023