
ராஜ ராஜ சோழனின் 1038வது சதய விழா - தாஞ்சாவூருக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு
செய்தி முன்னோட்டம்
உலக புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவில் கடந்த 1010ம்.,ஆண்டு ராஜ ராஜ சோழன் கட்டி குடமுழுக்கு செய்ததாக வரலாறு கூறுகிறது.
இந்தியாவின் தொல்லியல் துறை பராமரிப்பிலுள்ள இக்கோயிலுக்கு உலகம் முழுவதுமிருந்து சுற்றுலா பயணிகள் வந்துசெல்வது வழக்கம்.
இத்தகைய பெருமையினை பெற்ற இக்கோயிலை கட்டிய ராஜ ராஜ சோழன் ஐப்பசி மாதம் சதய நட்சத்திரத்தன்று பிறந்த காரணத்தினால், ஒவ்வொரு ஆண்டும் அன்றைய தினம் சதய விழாவாக மிக விமர்சையாக கொண்டாடப்படுகிறது.
இதன்படி இந்தாண்டு வரும் 24ம்தேதி சதய விழா துவங்குகிறது.
சதய நட்சத்திர நாளான 25ம்தேதி ராஜராஜ சோழனின் சிலைக்கு மாலை அணிவிக்கும் விழா மிக விமர்சையாக கொண்டாடப்படவுள்ளது.
அரசு விழாவாக கொண்டாடப்படுவதால் அன்றைய தினத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
ட்விட்டர் அஞ்சல்
உள்ளூர் விடுமுறை
#BREAKING | தஞ்சையில் அக்.25ல் உள்ளூர் விடுமுறை#Thanjavur | #LocalHoliday pic.twitter.com/vD9rPsgsDg
— PuthiyathalaimuraiTV (@PTTVOnlineNews) October 11, 2023