LOADING...
விஜய் சேதுபதிக்கு எதிராக அதிர்ச்சியளிக்கும் குற்றச்சாட்டு - சமூக வலைதளத்தில் வைரலாகும் பதிவு
விஜய் சேதுபதிக்கு எதிராக அதிர்ச்சியளிக்கும் குற்றச்சாட்டு

விஜய் சேதுபதிக்கு எதிராக அதிர்ச்சியளிக்கும் குற்றச்சாட்டு - சமூக வலைதளத்தில் வைரலாகும் பதிவு

எழுதியவர் Venkatalakshmi V
Jul 29, 2025
03:52 pm

செய்தி முன்னோட்டம்

தென்னிந்திய திரையுலகின் முக்கிய நடிகர்களுள் ஒருவராக விளங்கும் விஜய் சேதுபதியின் மீது அவதூறு பரப்பும் விதமாக ஒரு பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ரம்யா மோகன் என்ற பெயருடன், X (முந்தைய ட்விட்டர்) தளத்தில் ஒருவர் வெளியிட்ட பக்கப்பதிவு தற்போது வைரலாகி, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. போதைப்பொருள் பழக்கம், ஏமாற்றும் உறவுகள், நிதி இழப்பு உள்ளிட்ட விவரங்களை உள்ளடக்கிய அந்தப் பதிவில், விஜய் சேதுபதி ஒரு பெண்ணை பல ஆண்டுகளாக பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகவும், அந்த பெண் தற்போது மறுவாழ்வு மையத்தில் சிகிச்சையில் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும், அந்தக் குற்றச்சாட்டில் விஜய் சேதுபதி ஒரு "சமூக வலைதள மகான்" போல தான் உருவாக்கியிருக்கிறார் என்ற விமர்சனமும் இடம் பெற்றுள்ளது.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

நீக்கம்

பதிவுகள் வைரலாக பரவியதும் நீக்கம் 

அந்த பதிவுகள் வைரலாக பரவத்தொடங்கியதும், அவற்றை பதிவிட்ட அந்த பெண்ணே தாமாகவே நீக்கியுள்ளதும் குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக, குற்றச்சாட்டுகள் மீதான உண்மை நிலை தொடர்பாக உறுதி செய்ய இயலவில்லை. "விரக்தியில் பகிர்ந்தேன், அந்தப் பதிவால் அந்த பெண்ணின் தனியுரிமைக்கு பாதிப்பு ஏற்படக்கூடும் என்பதால் நீக்கி விட்டேன்," என அவர் விளக்கம் அளித்துள்ளார். இந்த நிலையில், விஜய் சேதுபதி தரப்பில் இதுகுறித்து எந்தவொரு பதிலும் இதுவரை வெளியாகவில்லை. சமூக வலைதளங்களில் இது தொடர்பான விவாதங்கள் தீவிரமடைந்துள்ளன. சினிமா பிரபலங்கள் தொடர்ந்து போதைப்பொருள் பயன்பாட்டிலும், பாலியல் குற்றச்சாட்டிலும் சிக்கிவரும் சூழலில், தமிழ் சினிமாவின் உச்சம் தொட்ட நடிகரின் மீது இப்படி ஒரு குற்றச்சாட்டினை பொதுவெளியில் பகிர்ந்தது, ஒரு விவாதத்துக்குரிய சம்பவமாக கருதப்படுகிறது.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post