Page Loader
கல்கி 2898 AD அடுத்த பாகத்தின் படப்பிடிப்பு எப்போது துவங்கும்? தயாரிப்பாளர்கள் வெளியிட்ட தகவல் 
இந்த படத்தை நாக் அஸ்வின் இயக்கியிருந்தார்

கல்கி 2898 AD அடுத்த பாகத்தின் படப்பிடிப்பு எப்போது துவங்கும்? தயாரிப்பாளர்கள் வெளியிட்ட தகவல் 

எழுதியவர் Venkatalakshmi V
Aug 30, 2024
11:28 am

செய்தி முன்னோட்டம்

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கமல்ஹாசன், அமிதாப்பச்சன், பிரபாஸ் மற்றும் தீபிகா படுகோன் உள்ளிட்டவர்கள் முக்கிய பாத்திரங்களில் நடித்த 'கல்கி 2898AD' என்ற திரைப்படம் வெளியானது. சயின்ஸ் ஃபிக்ஷன்- ஃபேண்டஸி பாணியில் அமைந்த இந்த படத்தை நாக் அஸ்வின் இயக்கியிருந்தார். வைஜெயந்தி மூவீஸின் ஸ்வப்னா தத் மற்றும் பிரியங்கா தத் ஆகியோர் தயாரித்திருந்தனர். இந்த நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகம் எப்போது தொடங்கும் என்ற தகவலை தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். நியூஸ் 18 அறிக்கையின்படி, படத்தின் படப்பிடிப்பு 2025 இல் தொடங்கும். தயாரிப்பாளர் பிரியங்கா மேலும் கூறுகையில், "அடுத்த ஐந்து அல்லது ஆறு மாதங்களில் (ஜனவரி அல்லது பிப்ரவரி 2025) படப்பிடிப்பு தொடங்கும். அது ஆரம்பித்தவுடன், அதைப் பற்றி மேலும் பேச முடியும்" எனத்தெரிவித்தார்.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post