Page Loader
அஜித்தின் 'விடாமுயற்சி' தள்ளிப்போனதால், 'குட் பேட் அக்லி' வெளியீடு எப்போது?
அஜித்தின் 'குட் பேட் அக்லி' வெளியீடு எப்போது?

அஜித்தின் 'விடாமுயற்சி' தள்ளிப்போனதால், 'குட் பேட் அக்லி' வெளியீடு எப்போது?

எழுதியவர் Venkatalakshmi V
Jan 03, 2025
06:55 pm

செய்தி முன்னோட்டம்

'விடாமுயற்சி' திரைப்படம் பொங்கல் பண்டிகைக்காக வெளியிட திட்டமிடப்பட்டிருந்தாலும், தற்போது வெளியீடு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. எனினும் எதற்காக இந்த ஒத்திவைப்பு என்ற காரணமோ, மாற்று வெளியீட்டு தேதியையோ இன்னும் அறிவிக்கவில்லை. இதன் தொடர்ச்சியாக தற்போது 10 படங்கள் பொங்கல் பண்டிகையை ஒட்டி வெளியாகவிருப்பதாக அறிவித்துள்ளது. மதகஜராஜா, வணங்கான், காதலிக்க நேரமில்லை என பல படங்கள் திரையை ஆக்கிரமிக்க உள்ளன. இந்த நிலையில் கிட்டதட்ட 2 வருடங்களாக அஜித்தின் படம் எதுவும் வெளியாகாத நிலையில், தயார் நிலையில் உள்ள விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி ஆகிய இரு படங்களும் விரைவில் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.

விவரங்கள்

படவெளியீடு விவரங்கள்

'விடாமுயற்சி' திரைப்படம் தற்போது ஜனவரி இறுதியில் வெளியிடப்படலாம் என்று திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இத்துடன் படத்தின் அனைத்து பிரச்சினைகளும் விரைவில் தீர்க்கப்படும் என படக்குழு உறுதியளித்துள்ளது. படத்தை விளம்பரப்படுத்துவதற்கான டீஸர், ட்ரெய்லர் மற்றும் ப்ரோமோக்கள் அனைத்தும் தற்போது தணிக்கைக்கு அனுப்பப்பட்டு முடிக்கப்பட்டுள்ளன. 'குட் பேட் அக்லி' படத்தின் வெளியீடும் பொங்கல் வெளியீட்டாக திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், 'விடாமுயற்சி' படத்தின் வெளியீடு முன்னதாக இருந்ததால், அதனை தவிர்த்து 'குட் பேட் அக்லி' படத்தின் பணிகள் தாமதமாகின. தற்போதைய நிலவரப்படி, 'குட் பேட் அக்லி' ஏப்ரல் 10-ஆம் தேதி வெளியிடப்படுவதாக படக்குழு முடிவெடுத்துள்ளது. 'விடாமுயற்சி' எப்போது வெளியானாலும், 'குட் பேட் அக்லி' ஏப்ரல் 10-ஆம் தேதியில் வெளியிடப்படும் என முடிவு செய்யப்பட்டுள்ளது.