சென்னை மழை குறித்து தமிழ் சினிமா நட்சத்திரங்கள் கூறுவது என்ன?
மிக்ஜாம் புயலால் பெய்து வந்த கனமழை சென்னையில் நின்று விட்ட நிலையில், இன்னும் மாநகரின் பல பகுதிகளில் வெள்ளநீர் வடியவில்லை. வெள்ளத்தில் சிக்கி உள்ளவர்களை மாநில மற்றும் மத்திய மீட்பு படையினர் மீட்டுவருகின்றனர். மேலும் பலருக்கு இந்திய ராணுவம் விமான மூலம் உணவுப் பொருட்களை வழங்கி வருகிறது. சென்னையில் பெய்து வந்த தொடர் மழையால் அசம்பாவிதம் ஏற்படாமல் தடுக்க, கடந்த இரண்டு நாட்களுக்கு மேல் பலப்பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னையில் மழை நீர் வடிகால் பணிகள் மற்றும் சரியான திட்டமிடல் இல்லாததே இதற்கு காரணம் என விஷால் தொடங்கி, சந்தோஷ் நாராயணன் வரை பல சினிமா பிரபலங்கள் குற்றம் சாட்டியுள்ளனர். சென்னை பெருவெள்ளம் குறித்து, சினிமா பிரபலங்களின் கருத்துக்களை இங்கு பார்க்கலாம்.
"மக்களை ஏன் வரி கட்ட வேண்டும் என கேட்க வைத்துவிடாதீர்கள்"- விஷால் ஆவேசம்
Dear Ms Priya Rajan (Mayor of Chennai) and to one & all other officers of Greater Chennai Corporation including the Commissioner. Hope you all are safe & sound with your families & water especially drainage water not entering your houses & most importantly hope you have... pic.twitter.com/pqkiaAo6va— Vishal (@VishalKOfficial) December 4, 2023
"தொடர்ந்து 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஒவ்வோர் ஆண்டும் ஒரு வாரத்திற்கு முழங்கால் அளவு நீர் தேங்குவதும்" - சந்தோஷ் நாராயணன் குற்றச்சாட்டு
10+ continuous years of flooding with weeks of at least knee deep water and power cuts for atleast 100 hours in our locality during every year is our harsh reality. This year is setting new benchmarks already. Funnily enough, it is neither historically a lake nor a 'low lying'...— Santhosh Narayanan (@Music_Santhosh) December 5, 2023
வீட்டில் சிக்கியுள்ள தன்னை மீட்கும்படி கோரிக்கை விடுத்த விஷ்ணு விஷால், மீட்கப்பட்டார்.
More than 30 people wer taken out from our villa community with many old people as well Thanks to the firemen who helped us all and are helping other people in karapakkam... We gave them some food that we had.. Please help these people as well ..they are workin non stop n... https://t.co/1FmJoGSPzV— VISHNU VISHAL - VV (@TheVishnuVishal) December 5, 2023
48 மணி நேரமாக மின்சாரம் இல்லை என கீர்த்தி பாண்டியன் ட்விட்
This is Mylapore, off Radhakrishnan Salai near Vivekananda college. NO ONE has come to clear the water here. It's been like this since yesterday, and by the minute more sewage water is coming out and getting mixed. Water has entered all the houses at ground floor level here.... pic.twitter.com/KSwxvJS8bf— Keerthi Pandian (@iKeerthiPandian) December 5, 2023
அரசு எவ்வளவுதான் முன்னெச்சரிக்கை எடுத்தாலும், ஓர் எல்லை வரை தான் இயற்கை விளைவுகளை கட்டுப்படுத்த முடியும்- கமலஹாசன்
அரசு எவ்வளவுதான் முன்னெச்சரிக்கையோடு செயல்பட்டாலும் இயற்கைச் சீற்றங்களின் விளைவுகளை ஓர் எல்லை வரைதான் கட்டுப்படுத்த முடியும். இந்தத் தருணத்தில் நமது பாதுகாப்பை உறுதி செய்துகொண்டு, அரசு இயந்திரத்தோடு கைகோர்த்து செயல்பட்டு நிலைமை சீரடைய உதவ வேண்டியது அவசியம். #CycloneMichuang...— Kamal Haasan (@ikamalhaasan) December 4, 2023
உணவு மற்றும் குடிநீர் வேண்டுபவர்கள் தன்னை அணுகலாம் என, விஜே அஞ்சனா ரங்கன் ட்விட்
Have water bottles and food stocked up in my car. If any need in ecr/ omr please post on this thread.— Anjana Rangan (@AnjanaVJ) December 6, 2023
புயல் நிவாரண பணிகளுக்காக ஒரு லட்சம் வழங்கிய, நடிகர் ஹரிஷ் கல்யாண்
My humble contribution. கை கோர்ப்போம் #Chennai 💪#ChennaiFloodRelief #chennaifloods @CMOTamilnadu pic.twitter.com/CiqBV4SCsm— Harish Kalyan (@iamharishkalyan) December 6, 2023
வெள்ளத்தில் சிக்கி உள்ளவர்களை மீட்க, சர்ஃப் டர்ஃப் படகுகள் வழங்குவதாக ஜெயிலர் பட நாயகி மிர்னா ட்விட்
Surf Turf is helping out on rescue operations, and they have boats. They are also willing to supply basic provisions via boat. Contact : 9884046674#ChennaiRains— Mirnaa (@mirnaaofficial) December 5, 2023