LOADING...
'கட்டா குஸ்தி 2' ப்ரோமோ வீடியோ வெளியீடு
நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் செல்லா அய்யாவு இணைந்து பணியாற்றுகிறார்கள்

'கட்டா குஸ்தி 2' ப்ரோமோ வீடியோ வெளியீடு

எழுதியவர் Venkatalakshmi V
Sep 01, 2025
06:57 pm

செய்தி முன்னோட்டம்

2022ஆம் ஆண்டு வெளியான 'கட்டா குஸ்தி' திரைப்படம் வணிகரீதியாகவும் விமர்சனரீதியாகவும் வெற்றி பெற்றது. இப்போது அதன் தொடர்ச்சியாக 'கட்டா குஸ்தி-2' திரைப்படம் தயாராகவுள்ளது. இதற்கான ப்ரோமோ வீடியோவை படக்குழு இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. படத்தில் மீண்டும் நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் செல்லா அய்யாவு இணைந்து பணியாற்றுகிறார்கள். இப்படத்தை விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் மற்றும் வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் கூட்டாக தயாரிக்கின்றன. படத்தில் ஐஸ்வர்யா லட்சுமி, முனிஷ்காந்த், காளி வெங்கட், கருணாஸ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இப்படத்திற்கு இசையமைக்கவிருப்பது ஷான் ரோல்டன். முதல் பாகமான 'கட்டா குஸ்தி' தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியானது. ரூ.5 கோடி பட்ஜெட்டில் உருவான அந்த படம், ரூ.30 கோடிக்கு மேல் வசூல் செய்தது.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post