Page Loader
ஆகஸ்ட் 29 அன்று நடிகர் விஷால்- நடிகை சாய் தன்ஷிகா திருமணம்; யோகி டா படவிழாவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
ஆகஸ்ட் 29 அன்று நடிகர் விஷால்- நடிகை சாய் தன்ஷிகா திருமணம்

ஆகஸ்ட் 29 அன்று நடிகர் விஷால்- நடிகை சாய் தன்ஷிகா திருமணம்; யோகி டா படவிழாவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

எழுதியவர் Sekar Chinnappan
May 19, 2025
09:17 pm

செய்தி முன்னோட்டம்

நடிகர் விஷால் மற்றும் நடிகை சாய் தன்ஷிகா, தமிழ் திரைப்பட உலகின் பிரபலமான இருவரும், வரும் ஆகஸ்ட் 29 ஆம் தேதி திருமணம் செய்ய இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. 'யோகி டா' பட விழாவில் கலந்து கொண்ட நடிகை தன்ஷிகா, மேடையில் இந்த தகவலை வெளியிட்டு ரசிகர்களுக்கு மகிழ்ச்சியளித்தார். விழாவின் பின்னர் மேடையில் உரையாற்றிய விஷாலும், இதை உறுதி செய்தார். இதன்மூலம், கடந்த சில நாட்களாக ஊடகங்களில் பரவி வந்த செய்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் இதுவரை தங்களின் உறவைப் பற்றி பொதுவெளியில் எதுவும் வெளிப்படுத்தாத நிலையில், திருமண அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. திருமணம் தொடர்பான கூடுதல் தகவல்கள் விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ட்விட்டர் அஞ்சல்

விஷால் - சாய் தன்ஷிகா திருமணம்