சென்னை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட ரஜினிகாந்த் வீடு; வைரலாகும் வீடியோ
சென்னையிலுள்ள போயஸ் கார்டன் பல கோடீஸ்வரர்களும், தொழிலதிபர்களும் வாழும் இடம். இந்த இடத்திற்கு மற்றுமொரு அடையாளம், அங்கு தான் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்கிறார். சமீபத்தில் பெய்த மழையில் நகரமே தத்தளித்து கொண்டிருக்க, சூப்பர்ஸ்டார் மட்டும் விதிவிலக்கா என்ன? போயஸ் கார்டனில் உள்ள அவரின் வீட்டை சுற்றி வெள்ள நீர் சூழ்ந்துள்ள வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. அதிர்ஷ்டவசமாக, 'தலைவர் 170' படத்தின் படப்பிடிப்பிற்காக ரஜினிகாந்த் திருநெல்வேலி சென்றிருந்ததால், அவர் அச்சமயம் அங்கு இல்லை என்று கூறப்படுகிறது. 'தலைவர் 170' திரைப்படத்தின் ஆரம்பகட்ட படப்பிடிப்பு கொச்சின் மற்றும் மும்பையில் நடைபெற்றது. முக்கிய வேடத்தில் அமிதாப் பச்சன் நடிக்கவிருப்பதால், அவர் சார்ந்த பகுதிகளை மும்பையில் ஷூட் செய்துள்ளனர்.