
கடைசிநேரத்தில் விக்ரமின் 'வீர தீர சூரன்' பட ரிலீசிற்கு சட்ட சிக்கல்; என்ன நடந்தது?
செய்தி முன்னோட்டம்
அருண் குமார் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் இன்று வெளியாக இருந்த 'வீர தீர சூரன்' படத்திற்கு டெல்லி நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
அதன் தீர்ப்பு இன்று காலை 10:30 மணியளவில் வெளியாகும் வரை, படத்தை வெளியிடக்கூடாது என தடை உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனால், இப்படத்தின் வெளிநாட்டு ப்ரீமியர் காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டில் 9 மணிக்கு ரிலீசான இப்படம், தற்போது வெளியிட முடியாத நிலை உருவாகியுள்ளது, இதனால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
காரணம்
வீர தீர சூரனுக்கு ஏன் தடை விதிக்கப்பட்டது?
B4U என்ற நிறுவனம் இந்த வழக்கை தொடுத்துள்ளது. "வீர தீர சூரன்" படத்தில் அந்நிறுவனம் பணமுதலீடு செய்துள்ளது.
அதற்காக இப்படத்தின் டிஜிட்டல் உரிமத்தை அந்நிறுவனத்திற்கு எழுதிக்கொடுத்துவிட்டாராம் தயாரிப்பாளர்.
ஆனால் படத்தின் ஓடிடி உரிமை விற்கப்படுவதற்கு முன்னர் படம் ரிலீஸுக்கு தயாராகிவிட்டது.
அதோடு படத்தின் ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்பட்டுவிட்டதால், படத்தை அந்நிறுவனத்தால் ஓடிடியில் விற்க முடியவில்லை என கூறப்படுகிறது.
இதனால் தாங்கள் முதலீடு செய்த தொகையில் தங்களுக்கு 50 சதவீதம் திருப்பி தருமாறு நஷ்ட ஈடு கோரிஅந்த நிறுவனம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.
அதை விசாரித்த நீதிமன்றம், தற்போது படத்தின் ரிலீஸ் மீது இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
விவரங்கள்
படத்தை பற்றிய விவரங்கள்
'வீர தீர சூரன்' இயக்கியுள்ள எஸ்.யு. அருண்குமார் இயக்கியுள்ளார்.
இவர் இதற்கு முன்பு "பண்ணையாரும் பத்மினியும்", "சேதுபதி", "சித்தா" போன்ற பல பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை இயக்கியவர்.
இப்படத்தில் விக்ரம் உடன், துஷாரா விஜயன், எஸ்.ஜே. சூர்யா மற்றும் சூரஜ் வெஞ்சர்மூடு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
"வீர தீர சூரன்" இரண்டு பாகமாக உருவாகியுள்ள படம். இதில் இரண்டாவது பாகமே இப்போது ரிலீசாக உள்ளது.
படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.
இப்படத்தை ரியா ஷிபு தயாரித்துள்ளார்.
மார்ச் 27 ஆம் தேதி ரம்ஜான் விடுமுறையையொட்டி உலகளவில் இப்படம் ரிலீசாகுமென ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.