LOADING...
விக்ரமின் வீர தீர சூரன் பகுதி 2 படத்தின் டிரெய்லர் மற்றும் ஆடியோ வெளியீட்டு தேதி அறிவிப்பு
விக்ரமின் வீர தீர சூரன் பகுதி 2 ஆடியோ வெளியீட்டு தேதி அறிவிப்பு

விக்ரமின் வீர தீர சூரன் பகுதி 2 படத்தின் டிரெய்லர் மற்றும் ஆடியோ வெளியீட்டு தேதி அறிவிப்பு

எழுதியவர் Sekar Chinnappan
Mar 17, 2025
03:21 pm

செய்தி முன்னோட்டம்

நடிகர் விக்ரமின் வரவிருக்கும் படமான வீர தீர சூரன் பகுதி 2 இந்த மாதம் 27ஆம் தேதி திரைக்கு வர உள்ளது. எஸ்.யு.அருண் குமார் இயக்கத்தில் தயாராகியுள்ள இந்த திரைப்படம் இரண்டு பாகமாக எடுக்கப்பட்டுள்ள நிலையில், வித்தியாசமாக இரண்டாம் பாகம் முதலில் வெளியிடப்படுகிறது. படத்தின் முதல் பாகம் பின்னர் வெளியிடப்படும் என தெரிகிறது. ரியா ஷிபு தயாரித்த இந்தப் படத்தில் எஸ்.ஜே. சூர்யா, சூரஜ் மற்றும் துஷாரா விஜயன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டைட்டில் டீசர் வெளியிடப்பட்டு கவனத்தை ஈர்த்தது. பின்னர், அதிகாரப்பூர்வ டீசரும் ரசிகர்களிடமிருந்து நேர்மறையான விமர்சனத்தைப் பெற்றது.

பாடல்

ஆத்தி அடி ஆத்தி பாடலுக்கு வரவேற்பு

படத்தின் இரண்டாவது பாடலான ஆத்தி அடி ஆத்தி சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதைத் தொடர்ந்து தெலுங்கு டீசர் வெளியிடப்பட்டது. இப்போது, ​​டிரெய்லர் மற்றும் ஆடியோ வெளியீட்டு நிகழ்வு மார்ச் 20 ஆம் தேதி ஆவடியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் மாலை 7 மணிக்கு தொடங்கும் என்று தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள புதிய அப்டேட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த படம் மார்ச் 27 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. விக்ரமின் முந்தைய படமான தங்கலான் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறாத நிலையில், இந்த படம் நல்ல வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், அவரது ரசிகர்களும் படத்தின் வெளியீட்டிற்காக ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

ட்விட்டர் அஞ்சல்

படக்குழுவின் எக்ஸ் பதிவு