NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / விக்ரமின் வீர தீர சூரன் பகுதி 2 படத்தின் டிரெய்லர் மற்றும் ஆடியோ வெளியீட்டு தேதி அறிவிப்பு
    அடுத்த செய்திக் கட்டுரை
    விக்ரமின் வீர தீர சூரன் பகுதி 2 படத்தின் டிரெய்லர் மற்றும் ஆடியோ வெளியீட்டு தேதி அறிவிப்பு
    விக்ரமின் வீர தீர சூரன் பகுதி 2 ஆடியோ வெளியீட்டு தேதி அறிவிப்பு

    விக்ரமின் வீர தீர சூரன் பகுதி 2 படத்தின் டிரெய்லர் மற்றும் ஆடியோ வெளியீட்டு தேதி அறிவிப்பு

    எழுதியவர் Sekar Chinnappan
    Mar 17, 2025
    03:21 pm

    செய்தி முன்னோட்டம்

    நடிகர் விக்ரமின் வரவிருக்கும் படமான வீர தீர சூரன் பகுதி 2 இந்த மாதம் 27ஆம் தேதி திரைக்கு வர உள்ளது.

    எஸ்.யு.அருண் குமார் இயக்கத்தில் தயாராகியுள்ள இந்த திரைப்படம் இரண்டு பாகமாக எடுக்கப்பட்டுள்ள நிலையில், வித்தியாசமாக இரண்டாம் பாகம் முதலில் வெளியிடப்படுகிறது.

    படத்தின் முதல் பாகம் பின்னர் வெளியிடப்படும் என தெரிகிறது. ரியா ஷிபு தயாரித்த இந்தப் படத்தில் எஸ்.ஜே. சூர்யா, சூரஜ் மற்றும் துஷாரா விஜயன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

    ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டைட்டில் டீசர் வெளியிடப்பட்டு கவனத்தை ஈர்த்தது.

    பின்னர், அதிகாரப்பூர்வ டீசரும் ரசிகர்களிடமிருந்து நேர்மறையான விமர்சனத்தைப் பெற்றது.

    பாடல்

    ஆத்தி அடி ஆத்தி பாடலுக்கு வரவேற்பு

    படத்தின் இரண்டாவது பாடலான ஆத்தி அடி ஆத்தி சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதைத் தொடர்ந்து தெலுங்கு டீசர் வெளியிடப்பட்டது.

    இப்போது, ​​டிரெய்லர் மற்றும் ஆடியோ வெளியீட்டு நிகழ்வு மார்ச் 20 ஆம் தேதி ஆவடியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் மாலை 7 மணிக்கு தொடங்கும் என்று தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள புதிய அப்டேட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த படம் மார்ச் 27 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

    விக்ரமின் முந்தைய படமான தங்கலான் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறாத நிலையில், இந்த படம் நல்ல வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    மேலும், அவரது ரசிகர்களும் படத்தின் வெளியீட்டிற்காக ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

    ட்விட்டர் அஞ்சல்

    படக்குழுவின் எக்ஸ் பதிவு

    Get ready to celebrate @chiyaan as #Kaali in #VeeraDheeraSooran with a Grand Audio and Trailer Launch on March 20th, 7.00 PM at Vel Tech University, Avadi, Chennai. See you there for an exciting evening filled with music and entertainment! 💥✨… pic.twitter.com/l5XZopawwS

    — HR Pictures (@hr_pictures) March 17, 2025
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    விக்ரம்
    சினிமா
    கோலிவுட்
    திரைப்படம்

    சமீபத்திய

    ராணுவ நடவடிக்கைகளை லைவ் கவரேஜ் செய்ய வேண்டாம் என மத்திய அரசு அறிவுரை இந்திய ராணுவம்
    இந்திய ராணுவத்தின் ஆபரேஷன் சிந்தூரை விமர்சித்த எஸ்ஆர்எம் பல்கலைக்கழக பேராசிரியர் இடைநீக்கம் ஆபரேஷன் சிந்தூர்
    போர்ப்பதற்றம் காரணமாக ஐபிஎல் 2025 தொடர் நிறுத்தம்; பிசிசிஐ அறிவிப்பு ஐபிஎல் 2025
    பாகிஸ்தான் விமானப்படையின் AWAC-ஐ நேற்றிரவு இந்தியா சுட்டு வீழ்த்தியது: அதன் சிறப்புகள் என்ன? இந்தியா

    விக்ரம்

    'துருவ நட்சத்திரம்' திரைப்படத்தின் ட்ரைலர் வெளியாகும் தேதி அறிவிப்பு  கோலிவுட்
    துருவ நட்சத்திரம் திரைப்படத்தின் ட்ரைலர்  வெளியானது இயக்குனர்
    ஃபுல் ஃப்ரேம் லென்ஸ்கள், 8k கேமராவில் படமாக்கப்பட்ட துருவ நட்சத்திரம் தமிழ் திரைப்படம்
    அடுத்தாண்டு, ஜனவரி 26 ஆம் தேதி வெளியாகிறது தங்கலான் திரைப்படம் இயக்குனர்

    சினிமா

    இந்திய சினிமாவின் முன்னோடியான ஷியாம் பெனகல் 90 வயதில் காலமானார் இந்திய சினிமா
    சினிமாவிற்கு முழுக்கு போட்டு உலகம் சுற்ற நினைத்த மலையாள நடிகர் மோகன்லால் மோகன்லால்
    ஆண்டு இறுதி 2024: கோலிவுட்டை அதிர்ச்சிக்குள்ளாகிய விவகாரத்துகளும் மோதல்களும் கோலிவுட்
    அக்டோபர் வரை சினிமாவிற்கு No; கார் பந்தயத்தில் முழுமையாக களமிறங்குகிறார் நடிகர் அஜித் நடிகர் அஜித்

    கோலிவுட்

    மீண்டும் மணிரத்னம்-ரஜினிகாந்த் காம்போ; தலைவர் பிறந்தநாளில் வெளியாகிறது அறிவிப்பு? ரஜினிகாந்த்
    சீனாவில் இரண்டே நாட்களில் ரூ.20 கோடி வசூல் செய்தது விஜய் சேதுபதியின் மகாராஜா திரைப்படம்  விஜய் சேதுபதி
    பவர்ஸ்டார் ஸ்ரீனிவாசன் மருத்துவமனையில் அனுமதி  தமிழ் சினிமா
    ரஜினிகாந்த் பிறந்தநாள் ஸ்பெஷல்; தலைவரின் சிறந்த 5 வேற்றுமொழி படங்கள் ரஜினிகாந்த்

    திரைப்படம்

    கேம் சேஞ்சர் படத்தின் ஓடிடி உரிமையை 105 கோடி ரூபாய்க்குக் கைப்பற்றியது அமேசான் பிரைம் வீடியோ ராம் சரண்
    வுமன்-சென்ரிக் திரைப்படத்தில் நடிக்கிறார் சாய் பல்லவி: அறிக்கை சாய் பல்லவி
    டைகர் கா ஹுக்கூம்; ஜெயிலர் படத்தின் இரண்டாம் பாகம் குறித்து இயக்குனர் நெல்சன் டீசர் வெளியீடு ஜெயிலர்
    பிரசாந்த் நீலின் புதிய சினிமாட்டிக் யூனிவெர்சில் நடிகர் அஜித் இடம்பெறுகிறாரா? நடிகர் அஜித்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025