
தள்ளிப்போகும் தங்கலான் வெளியீடு? - மார்ச்சில் வெளியாகும் என தகவல்
செய்தி முன்னோட்டம்
பா ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள தங்கலான் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி, மார்ச் மாதத்திற்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகவுள்ளது.
கோலார் தங்க வயலில், தமிழர்கள் பட்ட கஷ்டங்களை அடிப்படையாக வைத்து இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.
விக்ரமுடன், மாளவிகா மோகன், பசுபதி, பார்வதி திருவோத்து ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள நிலையில், ஜிவி பிரகாஷ் குமார் படத்திற்கு இசையமைத்துள்ளார். ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் படத்தை தயாரித்துள்ளது.
படம் முன்னதாக, குடியரசு தினத்தை முன்னிட்டு, ஜனவரி 26 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. தற்போது பட வெளியீடு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
2nd card
புனித வெள்ளிக்கு வெளியாகும் தங்கலான்
படம் திரையரங்குகளில் வெளியாவதற்கு முன்னர், பிரமோஷன் பணிகளுக்காக பல்வேறு திரைப்பட விழாக்களில் திரையிட, பட குழுவினர் முடிவு செய்துள்ளதால் பட வெளியீடு, திட்டமிட்டு தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக சில ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் படத்தின் இறுதி கட்ட பணிகளை திட்டமிட்டபடி முடிக்க முடியாததால், படம் வெளியாவது தள்ளிப் போவதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், புனித வெள்ளியை முன்னிட்டு மார்ச் மாதம் 29ஆம் தேதி, திரைப்படத்தை வெளியிட பட குழுவினர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
பள்ளிகளின் கோடை விடுமுறையும், மூன்று நாட்கள் தொடர்ந்து வரும் அரசு விடுமுறையை குறிவைத்து, படக்குழுவினர் இதை திட்டமிட்டுள்ளனர்.
ட்விட்டர் அஞ்சல்
புனித வெள்ளிக்கு வெளியாகும் தங்கலான்
#Thangalaan - Tentatively planned for the March 29 Good Friday Weekend release..🤙 Film to be sent for many Film Festivals..⭐#ChiyaanVikram | #PaRanjith | #GVP pic.twitter.com/a3MvZmtvRO
— Laxmi Kanth (@iammoviebuff007) December 20, 2023