
ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்த தங்கலான் ட்ரைலர் வெளியானது
செய்தி முன்னோட்டம்
கர்நாடகாவில் உள்ள KGF வயலில் நடைபெற்ற ஒரு நிஜ கதையை அடிப்படையாக கொண்டு உருவான 'தங்கலான்' படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது.
ரசிகர்கள் நீண்ட நாடுகளாக எதிர்பார்த்திருந்த அந்த ட்ரைலர் அவர்களின் எதிர்பார்ப்பை மிஞ்சி உள்ளது என விமர்சனங்கள் எழுந்துள்ளன.
பா. ரஞ்சித்தின் இயக்கத்தில் 'சீயான்' விக்ரம், மாளவிகா மோகனன், பார்வதி மற்றும் பலர் நடித்துள்ள இந்த திரைப்படம் கடந்த 2021 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது.
அதன் பின்னர் நீண்ட நாடுகளாக ஷூட்டிங்கில் இருந்த இந்த திரைப்படம், கடந்த 2023 இறுதியில் தனது படப்பிடிப்பை நிறைவு செய்வதாக அறிவிக்கப்பட்டது.
இது விக்ரமின் 61 வது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.
'தங்கலான்', வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளனர் படக்குழுவினர்.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
Catch the #Thangalaan Trailer in
— pa.ranjith (@beemji) July 10, 2024
Hindi ▶️https://t.co/UUOELvb5fZ
Telugu ▶️ https://t.co/afNb6U7Er9
Kannada ▶️ https://t.co/3l9zaoi5VH
Malayalam ▶️ https://t.co/6z4EC4EmwP