புது பிக் பாஸ் யாரு...வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு
விஜய் டிவியின் பிரபல ரியாலிட்டி ஷோவான பிக்பாஸ் நிகழ்ச்சியின் 8வது சீசன் விரைவில் தொடங்கவுள்ளது. இது நாள் வரையில் இத்தனை சீன்சன்களையும், பிக்பாஸ் தமிழின் முகமாகவும் இருந்தவர் உலகநாயகன் கமல்ஹாசன். ஆனால் சில நாட்களுக்கு முன்னர் அவர் யாரும் எதிர்பாராத அறிவிப்பை வெளியிட்டார். அதன் மூலம் ஏற்கனவே இருக்கும் பட வேலைகள் காரணமாக அவரால் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து ஹோஸ்ட் செய்ய முடியாது என அறிவித்தார். அதன் பின்னர் அவர் இடத்தில் யார் ஹோஸ்ட்டாக இருப்பார் என்ற கேள்வி எழுந்தது. இந்த நிலையில் விஜய் டிவி சார்பாக அதிகார பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, பிக் பாஸ் தமிழ் சீசன் 8இன் ஒருங்கிணைப்பாளராகவும், ஹோஸ்ட்டாகவும் விஜய் சேதுபதி இருப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.