விஜய்யின் 'ஜன நாயகன்' பாடலின் படப்பிடிப்பு சென்னையில் நடக்கவுள்ளது
செய்தி முன்னோட்டம்
'தளபதி' விஜய், விரைவில் தனது எதிர்வரும் 'ஜன நாயகன்' படத்திற்காக ஒரு புதிய பாடல் காட்சி ஷூட்டிங்கிற்கு தயாராகி வருகிறார்.
எச் வினோத் இயக்கிவரும் இந்தப் படம், அறிவிக்கப்பட்டதிலிருந்து செய்திகளில் இடம்பெற்று வருகிறது, குறிப்பாக இது விஜய்யின் திரைப்பயணத்தில் இறுதி படமாக இருக்கும் என செய்தி வெளியானதிலிருந்து, இப்படத்திற்கு கூடுதல் எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.
இதன் பின்னர் அவர் நடிப்பிற்கு முழுக்கு போட்டுவிட்டு தீவிர அரசியலில் நுழைவதாக அறிவித்ததனால் படத்திற்காக பலரும் ஆவலுடன் காத்துள்ளனர்.
படப்பிடிப்பு
பாடல் காட்சி சென்னையில் படமாக்கப்படவுள்ளது
இந்த நிலையில் படத்தின் முக்கிய பாடல் காட்சியை சென்னையில் படமாக்க குழு தயாராகி வருவதாக இந்தியா டுடே செய்தி வெளியிட்டுள்ளது.
எனினும் பாடலின் விவரங்கள், அதன் நடன அமைப்பு மற்றும் அமைப்பு உட்பட, இன்னும் ரகசியமாகவே உள்ளன.
தயாரிப்பு நிறுவனத்திற்கு நெருக்கமான ஒருவர் கூறுகையில், "இந்தப் பாடல் படத்தின் சிறப்பம்சங்களில் ஒன்றாக இருக்கும். நடன அமைப்பு பிரமாண்டமாக உள்ளது, மேலும் விஜய்யின் நடிப்பு ரசிகர்களை பிரமிக்க வைக்கும். இந்தப் பாடல் உயர் ஆற்றல்மிக்க துடிப்புகள் மற்றும் ஸ்டைலான காட்சிகளின் கலவையாக இருக்கும். இது விஜய் முன்பு செய்தவற்றிலிருந்து மிகவும் வித்தியாசமானது." எனக்கூறியதாக தெரிய வந்துள்ளது.
விவரங்கள்
ஜன நாயகன் படத்தின் விவரங்கள்
'வேட்டையன்' படத்திற்கு பின்னர் எச் வினோத் இயக்கும் திரைப்படம் 'ஜன நாயகன்' ஒரு சீரியஸ் படமாகவே இருக்கும்.
ஹெச். வினோத் பொதுவாக சமூக பிரச்சனைகளை பற்றி தனது திரைக்கதையை பின்னி இருப்பார். தற்போது விஜய் அரசியலில் நுழைவதால், இப்படம் அவருக்கு ஒரு பூஸ்டாக இருக்கும்.
இந்தப் படத்தில் பூஜா ஹெக்டே, பிரகாஷ் ராஜ், கெளதம் வாசுதேவ் மேனன், நரேன், மமிதா பைஜூ, வரலக்ஷ்மி மற்றும் பாபி தியோல் ஆகியோர் குறிப்பிடத்தக்க வேடங்களில் நடிக்கின்றனர்.
KVN ப்ரோடுக்க்ஷன்ஸ் இப்படத்தை தயாரிக்கிறது. படத்திற்கு இசையமைக்கவிருப்பது அனிருத்.