லியோ படத்தில் இணைகிறார் விஜய் சேதுபதி; ஆனால்..!
செய்தி முன்னோட்டம்
விஜய் நடிக்கும் 'லியோ' படம், லோகேஷ் கனகராஜின் LCU -வில் இணையுமா இணையாதா என பலத்த விவாதம் இணையத்தில் போய்க்கொண்டிருக்கும் நேரத்தில், பலரும் அதன் டைட்டில் ரிவீல் வீடியோவை டீகோட் செய்து தினமும் ஒரு புது தகவலை கண்டுபிடித்து கொண்டே இருந்தனர்.
இது குறித்து லோகேஷ் கனகராஜிடம் கேட்கப்பட்ட போது, ரசிகர்கள் இது போல எங்களுக்கே தெரியாத விஷயத்தை கண்டுபிடிக்கும் போது தான் எங்களுக்கு கூடுதல் பிரஷர் ஏறுகிறது என தெரிவித்தார்.
இந்த நிலையில், படத்தின் எழுத்தாளர்களின் ஒருவரான ரத்னகுமார், சில வாரங்களுக்கு முன்னர், ஒரு கண்ணாடி போட்டோ ஒன்றை பதிவேற்றி இருந்தார்.
அதையும் ரசிகர்கள் டீகோட் செய்து, விக்ரம் படத்தின் 'சந்தனம்' கதாபாத்திரத்துடன் ஒப்பிடத்துவங்கினர்.
card 2
லியோவில் விஜய் சேதுபதி!
'விக்ரம்' படத்தில் சந்தனமாக நடித்த விஜய் சேதுபதி, ஒரு சண்டை காட்சியில், ஓட்டை கண்ணாடி அணிந்திருந்தார். அந்த கண்ணாடியை தான் ரத்னகுமார் சூசகமாக குறிப்பிடுகிறார் என தகவல் பரவியது.
இது குறித்து விஜய் சேதுபதியிடம் கேட்கப்பட்டபோது, தான் லியோ படத்தில் நடிக்கவில்லை எனவும், ரத்னகுமார் அதை எதற்காக பதிவேற்றினார் என தனக்கு புரியவில்லை எனவும் கூறினார்.
இந்த நிலையில், விஜய் சேதுபதி, லியோ படத்தில் இணைகிறார் என்றும் ஆனால், நடிகராக அல்ல, டப்பிங்காக மட்டும் என ஒரு செய்தி வெளியாகி உள்ளது.
லியோவில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் நடிக்கிறார் என்பதை அறிந்திருப்பீர்கள். அவருக்கு டப்பிங் பேசவே விஜய் சேதுபதியை நாடியுளார்களாம்
ட்விட்டர் அஞ்சல்
சந்தேகத்தை கிளப்பிய ட்வீட்
Hemme.. 👀🤯..!#Leo | #santhanam
— Harinandan (@itsmehari20) February 19, 2023
| #VijaySethupathi | #ThalapathyVijay | #LokeshKanakaraj https://t.co/031PhNF99T pic.twitter.com/6TVsxzgnu6