
GOAT படத்தின் டிக்கெட் முன்பதிவு: அதிக விலையில் விற்பதாக புகார்
செய்தி முன்னோட்டம்
நடிகர் விஜய் நடிப்பில் தயாராகியுள்ள 'கோட்' திரைப்படத்தின் முன்பதிவு வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 30) தொடங்கியுள்ளது.
நடிகர் விஜயின் 68வது படமான 'கோட்' படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கியுள்ளார்.
அர்ச்சனா கல்பாத்தி தயாரித்துள்ள இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
மேலும், இந்த படத்தில் பிரசாந்த், பிரபுதேவா, மோகன், சினேகா உள்ளிட்ட பல்வேறு முக்கிய நட்சத்திரங்களும் நடித்துள்ளனர்.
GOAT செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், படத்திற்கான முன்பதிவு ஒருசில தியேட்டர்களில் தொடங்கி உள்ளது.
இதையடுத்து ரசிகர்கள் ஆர்வமாக முன்பதிவு செய்து வருகின்றனர். இந்த நிலையில் படத்தின் டிக்கெட்டுகளை அதிக விலைக்கு விற்பதாக குற்றசாட்டு எழுந்துள்ளது.
இதற்கான ஆதாரங்களை இணையத்தில் புகைப்படத்துடன் ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
#JUSTIN | விஜய் நடிக்கும் GOAT படத்தின் முதல் நாள் காட்சிக்கான டிக்கெட் ரோஹினி திரையரங்கில் அதிகாரப்பூர்வமாக 390 ரூபாய்க்கு விற்பனை! #ActorVijay | #Vijay | #GOAT | #FDFS | #GOATFDFS | #Rohinitheatre pic.twitter.com/M3NPWjlCJ5
— PuthiyathalaimuraiTV (@PTTVOnlineNews) August 30, 2024