Page Loader
விஜய் ஃபேன்ஸ்..விரைவில் OTTயில் விஜய்யின் GOAT ! 
விரைவில் OTTயில் விஜய்யின் GOAT!

விஜய் ஃபேன்ஸ்..விரைவில் OTTயில் விஜய்யின் GOAT ! 

எழுதியவர் Venkatalakshmi V
Sep 23, 2024
04:13 pm

செய்தி முன்னோட்டம்

தளபதி விஜய்யின் சமீபத்திய திரைப்படமான தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் (GOAT) நெட்ஃபிளிக்ஸில் டிஜிட்டல் வெளியாக உள்ளது. விஜய் இரட்டை வேடங்களில் நடித்துள்ள இப்படம், வெங்கட் பிரபு இயக்கத்தில் ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் உருவான ஒரு அறிவியல் புனைகதை ஆக்‌ஷன் த்ரில்லர். இது செப்டம்பர் 5, 2024 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. விஜய்யின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அரசியல் அறிமுகத்திற்கு முன் வெளியான கடைசி வெளியீடுகளில் இதுவும் ஒன்று.

வெளியீட்டு விவரங்கள்

'GOAT' அக்டோபர் 3 முதல் Netflix இல் ஸ்ட்ரீம் செய்யப்படுகிறது

GOAT க்கான OTT உரிமைகளை Netflix பெற்றுள்ளது. சமீபத்திய அறிக்கைகளின்படி, GOAT திரைப்படம் அக்டோபர் 3, 2024 முதல் ஓடிடியில் ஸ்ட்ரீமிங் செய்யப்படவுள்ளது. படத்தின் ப்ரோமஷன் பேட்டியின் போது, ​​இயக்குனர் வெங்கட் பிரபு, சுமார் 20 நிமிட டைரக்டர்'ஸ் கேட் காட்சிகளைக் கொண்ட ஒரு எஸ்ட்டெண்டெட் வெர்ஷன், நெட்ஃபிலிக்ஸ் இல் வெளியிடப்படும் என்று அறிவித்தார்.

கதை

'GOAT' படத்தில் விஜய் உளவாளியாக நடிக்கிறார்

GOAT இல், சிறப்பு பயங்கரவாத எதிர்ப்புப் படையின் (SATS) உளவாளி காந்தியின் பாத்திரத்தில் விஜய் நடித்துள்ளார். அவரும் அவரின் நண்பர்களான பிரபுதேவா, பிரஷாந்த் மற்றும் அஜ்மல் ஆகியோருடன் இணைந்து பணியாற்றிய ஒரு ஆப்பரேஷனில் நடைபெற்ற ஒரு அசம்பாவிதம், விஜயின் வாழக்கையை எப்படி புரட்டி போட்டது என்பது கதை. எம்.எஸ்.காந்தி மற்றும் ஜீவன் காந்தி/சஞ்சய் மேனன் என இரட்டை வேடங்களில் விஜய் நடித்துள்ளார். சுனில் தியாகராஜனாக பிரசாந்த், கல்யாண சுந்தரமாக பிரபுதேவா மற்றும் அனுராதா காந்தியாக சினேகா ஆகியோர் நடித்துள்ளனர்.