விஜய்யின் GOAT முதல் நாள் இறுதியில் ரூ.126.32 கோடி வசூல் செய்து சாதனை
தளபதி விஜய் மற்றும் இயக்குனர் வெங்கட் பிரபுவின் 'தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்' அல்லது 'GOAT' உலகம் முழுவதும் நேற்று வெளியானது. பாக்ஸ் ஆபிஸில் ஒரு அற்புதமான தொடக்கத்தை இந்த படம் பதிவு செய்தது. ஸ்பை த்ரில்லர் பாணியில் எடுக்கப்பட்ட இந்த படத்தில் விஜய் உடன் மோகன், பிரபு தேவா, பிரஷாந்த், சினேகா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ரசிகர்களின் கொண்டாட்டங்களுக்கு இடையே வெளியான இப்படம், உள்நாட்டு பாக்ஸ் ஆபிஸில் சுமார் 43 கோடி ரூபாய் வசூலித்ததாக கண்காணிப்பு இணையதளமான சாக்னில்க் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் உலக அளவில் பாக்ஸ் ஆபிஸில் 'GOAT' படம் ரூ.126.32 கோடியை (மொத்தம்) வசூலித்துள்ளதாக தயாரிப்பாளர் தரப்பு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.