Page Loader
'GOAT' பாக்ஸ் ஆபிஸ்: முதல் நாள் வசூல் ரூ.100 கோடியை தாண்டியது
'GOAT' பாக்ஸ் ஆபிஸ் Day 1

'GOAT' பாக்ஸ் ஆபிஸ்: முதல் நாள் வசூல் ரூ.100 கோடியை தாண்டியது

எழுதியவர் Venkatalakshmi V
Sep 06, 2024
08:53 am

செய்தி முன்னோட்டம்

தளபதி விஜய் மற்றும் இயக்குனர் வெங்கட் பிரபுவின் 'தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்' அல்லது 'GOAT' உலகம் முழுவதும் நேற்று வெளியானது. பாக்ஸ் ஆபிஸில் ஒரு அற்புதமான தொடக்கத்தை இந்த படம் பதிவு செய்தது. ஸ்பை த்ரில்லர் பாணியில் எடுக்கப்பட்ட இந்த படத்தில் விஜய் உடன் மோகன், பிரபு தேவா, பிரஷாந்த், சினேகா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ரசிகர்களின் கொண்டாட்டங்களுக்கு இடையே வெளியான இப்படம், உள்நாட்டு பாக்ஸ் ஆபிஸில் சுமார் 43 கோடி ரூபாய் வசூலித்ததாக கண்காணிப்பு இணையதளமான சாக்னில்க் தெரிவித்துள்ளது. உலக அளவில் பாக்ஸ் ஆபிஸில் 'GOAT' படம் ரூ.100 கோடியை (மொத்தம்) எளிதாகத் தாண்டியிருக்கலாம் என இந்தியா டுடே செய்தி வெளியிட்டுள்ளது.

வசூல்

GOAT வசூல் நிலவரம்

'GOAT' செப்டம்பர் 5 ஆம் தேதி உலகம் முழுவதும் பல மொழிகளில் திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. GOAT இந்தியாவில் மட்டுமே ரூ 43 கோடி வசூலித்ததாக கூறப்படுகிறது. இதில் தமிழ் பதிப்பு மட்டுமே ரூ 38.3 கோடி எனவும், 'GOAT' படத்தின் தெலுங்கு மற்றும் ஹிந்தி பதிப்புகள் முறையே ரூ.3 கோடி மற்றும் ரூ.1.7 கோடி வசூலித்துள்ளன எனவும் செய்தி குறிப்பு தெரிவிக்கிறது. இந்த படம் பாக்ஸ் ஆபிஸில் தனது வியாபாரத்தில் சரித்திரம் படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரூ.380 கோடி பொருட்செலவில் ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் தயாரித்த 'GOAT' படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.