NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / மற்றுமொரு தொழிலதிபர் வீட்டு திருமணம்: விஜய் மல்லையாவின் மகனுக்கு இந்த வாரம் திருமணம்!
    அடுத்த செய்திக் கட்டுரை
    மற்றுமொரு தொழிலதிபர் வீட்டு திருமணம்: விஜய் மல்லையாவின் மகனுக்கு இந்த வாரம் திருமணம்!
    சித்தார்த்தா மல்லையா தனது நீண்ட நாள் காதலியான ஜாஸ்மினை திருமணம் செய்ய உள்ளார்

    மற்றுமொரு தொழிலதிபர் வீட்டு திருமணம்: விஜய் மல்லையாவின் மகனுக்கு இந்த வாரம் திருமணம்!

    எழுதியவர் Venkatalakshmi V
    Jun 18, 2024
    03:29 pm

    செய்தி முன்னோட்டம்

    தப்பியோடி தற்போது லண்டனில் தலைமறைவாக உள்ள தொழிலதிபர் விஜய் மல்லையாவின் மகன் சித்தார்த்தா மல்லையா தனது நீண்ட நாள் காதலியான ஜாஸ்மினை திருமணம் செய்ய உள்ளார்.

    இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவில், சித்தார்த் மல்லையா ஜாஸ்மினுடன் ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்து கொண்டு, "திருமண வாரம் தொடங்கிவிட்டது.." என்று தலைப்பிட்டு தனது திருமணத்தை பற்றி அறிவித்தார்.

    சித்தார்த் மல்லையா தனது காதலிக்கு கடந்தாண்டு ஹாலோவீன் அன்று ப்ரொபோஸ் செய்தார். இதனையும் தனது இன்ஸ்டா பதிவு மூலம் உலகிற்கு அறிவித்தார் சித்தார்த்.

    முன்னாள் மாடல் அழகியான ஜாஸ்மின், சித்தார்த் உடன் நீண்ட நாட்களாக காதலில் உள்ளதாக கூறப்படுகிறது.

    முன்னதாக சித்தார்த் பாலிவுட் நடிகையான தீபிகா படுகோன்-ஐ சில காலம் காதலித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    சித்தார்த் மல்லையா

    யார் இந்த சித்தார்த் மல்லையா?

    முன்னாள் நடிகரும் மாடலுமான சித்தார்த் மல்லையா முதலில் ஐபிஎல் அணியின் ஆர்சிபி இயக்குநராக வெளியுலகிற்கு அறிமுகமானார்.

    சித்தார்த், கலிபோர்னியாவின் லாஸ் ஏஞ்சல்ஸில் பிறந்தார். அவர் லண்டன் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வளர்ந்தார். பின்னர் அவர் வெலிங்டன் கல்லூரி மற்றும் லண்டனின் குயின் மேரி பல்கலைக்கழகத்தில் படித்து பட்டம் பெற்றார்.

    நடிப்பின் மீது இருந்த ஆர்வம் காரணமாக ராயல் சென்ட்ரல் ஸ்கூல் ஆஃப் ஸ்பீச் அண்ட் டிராமாவில் பயிற்சி பெற்றார். ட்ராமா ஸ்கூலில் பட்டம் பெற்ற அவர், தொடர்ந்து ஒரு மாடலாகவும் நடிகராகவும் பணியாற்றத் தொடங்கினார்.

    அவர் பாலியல் நகைச்சுவைத் திரைப்படமான பிரம்மன் நாமன் உட்பட பல திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தோன்றியுள்ளார்.

    இதுமட்டுமின்றி, அவர் கின்னஸின் சந்தைப்படுத்தல் மேலாளராக பணியாற்றினார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    திருமணம்

    சமீபத்திய

    மாணவர்கள் கவனத்திற்கு, SSLC மற்றும் பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு பொதுத்தேர்வு
    முதன்முறையாக, தாலிபான் வெளியுறவுத்துறை அமைச்சரிடம் பேசிய இந்தியா வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் எஸ்.ஜெய்சங்கர்
    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ

    திருமணம்

    இரண்டு குழந்தைகளை தத்தெடுக்க முடிவு செய்துள்ள நடிகை சமந்தா சமந்தா ரூத் பிரபு
    ஆய்வு கட்டுரை வடிவமைப்பில் திருமண அழைப்பிதழ் - இணையத்தில் வைரல்  இந்தியா
    நீண்ட நாள் காதலியை கரம் பிடித்தார் இந்திய கிரிக்கெட் வீரர் முகேஷ் குமார் கிரிக்கெட்
    திருப்பதி கோயிலில் கூட்ட நெரிசல் காரணமாக புது மணப்பெண் உயிரிழப்பு ஆந்திரா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025