'அவளுடன் நானும் இறந்துவிட்டேன்': மகளின் இறப்பிற்கு பின்னர் விஜய் ஆண்டனியின் உருக்கமான பதிவு
இசையமைப்பாளர் மற்றும் நடிகருமான விஜய் ஆண்டனியின் மகள், யாரும் எதிர்பாராத விதமாக கடந்த 19-ஆம் தேதி தற்கொலை செய்து கொண்டார். கோலிவுட் வட்டாரத்தை அதிர்ச்சியில் ஆழ்த்திய இந்த சம்பவத்திற்கு பிறகு, நேற்று விஜய் ஆண்டனி தனது எக்ஸ் தளத்தில் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். மகளின் இழப்பிற்கு பிறகு அவர் வெளியிட்டிருக்கும் முதல் அறிக்கை இதுவாகும். அதில், " "அன்பு நெஞ்சங்களே என் மகள் மீரா மிகவும் அன்பானவள், தைரியமானவள். அவள் இப்போது இந்த உலகை விட சிறந்த ஜாதி, மதம், பணம், பொறாமை, வலி, வறுமை, வன்மம் இல்லாத ஒரு அமைதியான இடத்திற்குதான் சென்று இருக்கிறாள்..அவளுடன் நானும் இறந்துவிட்டேன்..அவள் பெயரில் நான் செய்யப்போகும் நல்ல காரியங்கள் அனைத்தையும் அவளே தொடங்கிவைப்பாள்" என பதிவிட்டுள்ளார்.
விஜய் ஆண்டனியின் உருக்கமான பதிவு
pic.twitter.com/Kt5EUSlZFq— vijayantony (@vijayantony) September 21, 2023