Page Loader
இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியின் மகள் மன அழுத்தம் காரணமாக தற்கொலை 
விஜய் ஆண்டனியின் மகள் தற்கொலை

இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியின் மகள் மன அழுத்தம் காரணமாக தற்கொலை 

எழுதியவர் Venkatalakshmi V
Sep 19, 2023
08:43 am

செய்தி முன்னோட்டம்

பிரபல இசையமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனியின் மகள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன. விஜய் ஆண்டனி, காதலில் விழுந்தேன், வேட்டைக்காரன் போன்ற பல்வேறு படங்களுக்கு படங்களுக்கு இசையமைத்து பிரபலமானவர். அதன் பின்னர், நான், பிச்சைக்காரன் போன்ற படங்களில் நடிக்கத்தொடங்கினார். விஜய் ஆண்டனிக்கு, மீரா என்ற மகள் உள்ளார். அவர் தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார். அவருக்கு வயது 16 இந்நிலையில் இன்று அதிகாலை 3 மணியளவில், TTK சாலையில் உள்ள விஜய் ஆண்டனியின் வீட்டில், அவரது மகள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

card 2

விஜய் ஆண்டனியின் மகள் தற்கொலை

காலை வெகு நேரமாகியும் கதவு திறக்காததால், கதவை உடைத்து பார்த்த விஜய் ஆண்டனியும் அவரது மனைவியும், லாரா தூக்கிட்டு இறந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார் விரைந்து சென்று லாராவின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் மீரா மிகுந்த மன அழுத்தத்தில் இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. விஜய் ஆண்டனியின் மகள் தற்கொலை செய்துகொண்ட சம்பவம், கோலிவுட் வட்டாரத்தை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது