
'அது முற்றிலும் பொய்யே'; விஜய் ஆண்டனி வெளியிட்ட அறிக்கை
செய்தி முன்னோட்டம்
சென்ற வாரம் சனிக்கிழமை இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியின் இசைநிகழ்ச்சி, சென்னை YMCA மைதானத்தில் நடைபெற்றது.
அதற்கு அடுத்த நாள், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் இசைநிகழ்ச்சியான 'மறக்குமா நெஞ்சம்', ECR சாலையில் நடைபெற்றது.
ஆனால் சரியான ஏற்பாடுகள் செய்யப்படாததால், ரஹ்மானின் இசைநிகழ்ச்சி கடும் விமர்சனங்களை சந்தித்து வருகிறது.
இதற்காக, ரஹ்மானும், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களும் மன்னிப்பு கோரியும், இசைநிகழ்ச்சியை காண முடியாதவர்களுக்கு பணத்தை திருப்பி அனுப்பும் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், ஒரு யூட்யூப் ஒன்றில், ரஹ்மானின் இசைநிகழ்ச்சி சர்ச்சைக்கு பின்னால், இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி இருப்பதாக கூறியது.
அந்த வீடியோ வைரலானதையடுத்து, தற்போது இதனை மறுத்து விஜய் ஆண்டனி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
சம்மந்தப்பட்ட யூட்யூப் சேனலின் மீது மானநஷ்ட வழக்கு தொடரப்போவதாகவும் அறிவித்துள்ளார்.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
அது முற்றிலும் பொய்யே! pic.twitter.com/x7sRGOu4tu
— vijayantony (@vijayantony) September 15, 2023