NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / விஜய்- அனிருத் கூட்டணியில் உருவான படங்களின் இசை வெளியீட்டு விழாக்கள்: ஒரு பார்வை
    அடுத்த செய்திக் கட்டுரை
    விஜய்- அனிருத் கூட்டணியில் உருவான படங்களின் இசை வெளியீட்டு விழாக்கள்: ஒரு பார்வை
    இசையமைப்பாளர் அனிருத் மற்றும் நடிகர் விஜய்

    விஜய்- அனிருத் கூட்டணியில் உருவான படங்களின் இசை வெளியீட்டு விழாக்கள்: ஒரு பார்வை

    எழுதியவர் Srinath r
    Sep 27, 2023
    10:55 am

    செய்தி முன்னோட்டம்

    லியோ படத்தின் தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ, பாதுகாப்பு காரணங்களுக்காகவும், நிகழ்ச்சிக்கு பாஸ் கேட்டு வந்த கோரிக்கைகளை அடுத்தும் இசை வெளியீட்டு விழாவை ரத்து செய்தது.

    இருப்பினும், லியோ திரைப்படத்தின் கேரள விநியோகஸ்த நிறுவனமான ஸ்ரீ கோகுலம் மூவிஸ் படத்தின் இசை வெளியீட்டு விழாவை கேரளாவில் கொச்சியில் நடத்த விருப்பம் தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

    ஆனால் சிலர் விஜய்-அனிருத் கூட்டணியில் உருவாகும் திரைப்படங்களுக்கும், இசை வெளியீட்டு விழாக்களுக்கும் ராசி இல்லை எனக் கூறுகின்றனர்.

    இதற்கு முன் இவர்கள் கூட்டணியில் உருவான மூன்று படங்களுக்கும் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடக்கவில்லை.

    2nd card

    எளிமையான இசை வெளியீட்டு விழா

    விஜய் அனிருத் கூட்டணியில், லியோ திரைப்படம் நான்காவது படம். இதற்கு முன், அனிருத், விஜய்யுடன் கத்தி, மாஸ்டர், பீஸ்ட் போன்ற படங்களில் இணைந்து பணியாற்றினார்.

    இதில் எந்த படத்திற்கும் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடக்கவில்லை என்பது சுவாரசியமான விஷயம்.

    கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான கத்தி படத்தின் இசை வெளியீட்டு விழா, எளிமையான முறையில், ஒரு நட்சத்திர விடுதியில் நடத்தப்பட்டது.

    பின் இவர்கள் கூட்டணியில் 2021 ஆம் ஆண்டு வெளியான மாஸ்டர் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவும், கொரோனா காரணமாக எளிமையாக நடத்தப்பட்டது.

    இத்திரைப்படத்திற்கு பின், பீஸ்ட் திரைப்படத்திற்காக மீண்டும் இக்கூட்டணி இணைந்தது. அப்படத்தின் இசை வெளியீட்டு விழாவும், முதலில் அறிவிக்கப்பட்டு பின்பு ரத்து செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

    3rd

    ரத்து செய்யப்பட்ட லியோ இசை வெளியீட்டு விழா

    விஜய் அனிருத் கூட்டணியின் நான்காம் படமான லியோவின் இசை வெளியீட்டு விழா முதலில் நேரு உள்விளையாட்டு அரங்கில், செப்டம்பர் 30ஆம் தேதி நடைபெறும் என தகவல் வெளியானது.

    இசை வெளியீட்டு விழாவிற்காக மேடைகள் தயாராவது போன்ற சில புகைப்படங்களும் வெளியானது குறிப்பிடத்தக்கது.

    இருப்பினும் படத்தின் தயாரிப்பு நிறுவனம் இசை வெளியீட்டு விழாவை தற்போது ரத்து செய்திருப்பது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

    விஜய் -அனிருத் கூட்டணியின் நான்காவது திரைப்படத்திற்கும் பிரம்மாண்டமான இசை வெளியீட்டு விழா இல்லாமல் போனதால், இக்கூட்டணிக்கும் இசை வெளியீட்டு விழாவிற்கும் ராசி இல்லை போலும் எனது ரசிகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    லியோ
    இசை வெளியீடு
    விஜய்
    அனிருத்

    சமீபத்திய

    பாகிஸ்தான் சூப்பர் லீக் காலவரையறை இன்றி நிறுத்ததி வைப்பதாக அறிவித்தது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கிரிக்கெட்
    பஞ்சாபின் ஃபிரோஸ்பூரில் பொதுமக்களை குறிவைத்து பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல்; மூன்று பேருக்கு காயம் பஞ்சாப்
    ஸ்ரீநகர் விமான நிலையத்தை குறிவைத்து ட்ரோன் தாக்குதல் முயற்சி? பாதுகாப்புப்படை எதிர் நடவடிக்கை ஜம்மு காஷ்மீர்
    இந்தியாவிற்குள் அத்துமீறி ஊடுருவிய பாகிஸ்தான் ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியது பாதுகாப்புப்படை இந்தியா

    லியோ

    செப்., 30ஆம் தேதி லியோ இசை வெளியீட்டு விழா: கட்டுப்பாடுகள் விதிப்பு விஜய்
    வெளியானது நடிகர் விஜய்யின் 'லியோ' படத்தின் தமிழ் போஸ்டர்  விஜய்
    'லியோ' படத்தின் ஹிந்தி போஸ்டர் இணையத்தில் வெளியானது  விஜய்
    லியோ இசைவெளியீட்டு விழா ரத்தானதை தொடர்ந்து ட்ரெண்ட் ஆகும் 'We Stand With Leo' ஹாஷ்டேக்; காரணம் என்ன? விஜய்

    இசை வெளியீடு

    ஏ. ஆர். ரகுமான் அடுத்த இசை நிகழ்ச்சிக்கான தகவல்கள் விரைவில் என அறிவித்துள்ளார். ஏஆர் ரஹ்மான்
    "முறையான அரங்க நிகழ்வுகளில் நன்கு அலங்கரித்து வாருங்கள்" விஜய்க்கு ஜேம்ஸ் வசந்தனின் அட்வைஸ் விஜய்
    சென்னையில் நடைபெற்ற ஜவான் இசைவெளியீட்டு விழா சிறப்பம்சங்கள்  பாலிவுட்

    விஜய்

    நடிகர் விஜய்யின் ஃபிட்னஸ் ரகசியம் என்னனு தெரியுமா? நடிகர் விஜய்
    நடிகர் விஜய் நடிக்கும் 'லியோ' படத்தின் பாடல் வெளியானது  லோகேஷ் கனகராஜ்
    வைரல் வீடியோ: 'புட்ட பொம்மா' பாடலுக்கு நடனமாடிய நடிகர் விஜய்  கோலிவுட்
    'லியோ' படத்தின் 'நா ரெடி' பாடலால் விஜய்க்கு வந்த சிக்கல்  நடிகர் விஜய்

    அனிருத்

    வெளியானது துணிவு படத்தின் இரண்டாவது பாடல் 'காசேதான் கடவுளடா' அஜீத்
    'அஜித் 62' பற்றி விக்னேஷ் சிவன் கொடுத்துள்ள புதிய அப்டேட்! திரைப்பட துவக்கம்
    500 மில்லியன் வியூஸ்களை கடந்து சாதனை புரிந்தது நடிகர் விஜய்யின் அரபிக்குத்து! விஜய்
    தளபதி 67: எகிறிய எதிர்ப்பார்ப்பு, வந்தது முதல் அறிவிப்பு! தளபதி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025