நடிகர் விஜய்யின் புதிய கட்சிக்கு வாழ்த்து தெரிவித்தார் ரஜினிகாந்த்
தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கிய தளபதி விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். இன்று விமான நிலையத்தில் காணப்பட்ட நடிகர் ரஜினியிடம் நடிகர் விஜய்யின் அரசியல் பிரவேசம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், "வாழ்த்துகள்" என்று கூறி இருக்கிறார். பிப்ரவரி 2 ஆம் தேதி, விஜய் தனது அரசியல் கட்சியை அறிவித்தார். 2026 தேர்தலில் தனது கட்சி போட்டியிடும் என்று அவர் தெரிவித்துள்ளார். தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் 'GOAT' படத்தின் படப்பிடிப்பு புதுச்சேரியில் நடந்து வருகிறது. தனது 69வது படத்திற்குப் பிறகு, தான் முழுநேர அரசியல்வாதியாக மாற இருப்பதாகவும் தளபதி விஜய் கூறியுள்ளார்.