Page Loader
வேட்டையன் OTT வெளியீடு: Amazon Prime வீடியோவில் எப்போது பார்க்கலாம்?
வேட்டையன் நவம்பர் 8ஆம் தேதி அமேசான் பிரைம் வீடியோவில் ஸ்ட்ரீமாக உள்ளது

வேட்டையன் OTT வெளியீடு: Amazon Prime வீடியோவில் எப்போது பார்க்கலாம்?

எழுதியவர் Venkatalakshmi V
Oct 31, 2024
12:10 pm

செய்தி முன்னோட்டம்

கடந்த அக்டோபர் 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானதைத் தொடர்ந்து, சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் விரைவில் ஓடிடியில் வெளியாகவுள்ளது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, வேட்டையன் நவம்பர் 8ஆம் தேதி அமேசான் பிரைம் வீடியோவில் ஸ்ட்ரீமாக உள்ளது. டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் அமிதாப் பச்சன் நடிப்பில் ஃபஹத் ஃபாசில், ராணா டக்குபதி, துஷாரா விஜயன், ரித்திகா சிங், அபிராமி ஆகியோர் நடித்துள்ளனர். வேட்டையன் நவம்பர் 8 முதல் இந்தியாவிலும், உலகெங்கிலும் உள்ள 240 நாடுகள் மற்றும் பிராந்தியங்களில், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியாகிறது.