சிங்கீதம் ஸ்ரீனிவாச ராவ்-விற்கு ஒன்று திரண்டு மரியாதை செய்த ராஜபார்வை படக்குழு
பழம்பெரும் இயக்குனர் சிங்கீதம் ஸ்ரீனிவாச ராவ். இவர் இயக்குனர் என்பதையும் தாண்டி ஒரு புகழ்பெற்ற கதாசிரியர் மற்றும் தயாரிப்பாளரும் கூட. இயக்குனர் சிங்கீதம் ஸ்ரீனிவாச ராவ்விற்கு 93 வயது நெருங்கி வருகிறது. அவருடைய இயக்கத்தில் வெளியான 'ராஜபார்வை' திரைப்படம், கிட்டத்தட்ட 43 வருடங்களுக்கு முன்னர், 1981ஆம் ஆண்டு வெளியானது. இந்த இருபெரும் விழாவினை கொண்டாடும் விதமாக, ராஜபார்வை படத்தில் பணியாற்றியவர்கள் மற்றும் இக்கால இளம் இயக்குனர்கள் பலரும், கமல்ஹாசன் தலைமையில் ஒன்றுகூடி, ராஜபார்வை படத்தின் ஸ்பெஷல் ஸ்க்ரீனிங் மற்றும் கலந்துரையாடல் ஒன்றை நிகழ்த்தினர். இந்த நிகழ்வில், இயக்குனர் சிங்கீதம் ஸ்ரீனிவாச ராவ் அழைத்து வரப்பட்டு கௌரவிக்கப்பட்டார். இந்த விழாவில், விழா நாயகன் தவிர, கமல்ஹாசன், மணிரத்னம், வைரமுத்து, சுஹாசினி உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.