Page Loader
நடிகர் மிதுன் சக்கரவர்த்தி பக்கவாத பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதி 
மருத்துவ பரிசோதனையில் அவருக்கு பக்கவாதம் இருப்பது கண்டறியப்பட்டது

நடிகர் மிதுன் சக்கரவர்த்தி பக்கவாத பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதி 

எழுதியவர் Venkatalakshmi V
Feb 11, 2024
07:03 am

செய்தி முன்னோட்டம்

பழம்பெரும் பாலிவுட் நடிகரும், பாஜக உறுப்பினருமான மிதுன் சக்கரவர்த்தி, மூளையின் இஸ்கிமிக் செரிப்ரோவாஸ்குலர் ஆக்சிடண்ட் (பக்கவாதத்தால்) பாதிக்கப்பட்டு கொல்கத்தாவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஊடக தகவல்கள்படி, மிதுன் சக்கரவர்த்தி சனிக்கிழமை(10/2/24) காலை நெஞ்சுவலி காரணமாக கொல்கத்தாவில் உள்ள அப்பல்லோ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. மருத்துவ பரிசோதனையில் அவருக்கு மூளையின் இஸ்கிமிக் செரிப்ரோவாஸ்குலர் (பக்கவாதம்) இருப்பது கண்டறியப்பட்டது. மருத்துவமனையின் கூற்றுப்படி, மிதுன் சக்ரவர்த்தி இப்போது முழு சுயநினைவுடன் இருக்கிறார் இருப்பினும் அவர் உடலின் கீழ் பகுதியில் பலவீனம் உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் மிதுன் சக்ரவர்த்திக்கு சமீபத்தில் பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது

ட்விட்டர் அஞ்சல்

மருத்துவமனை அறிக்கை