பழம்பெரும் நடிகர் மிதுன் சக்ரவர்த்திக்கு தாதாசாகேப் பால்கே விருது
பழம்பெரும் நடிகரும், அரசியல்வாதியுமான மிதுன் சக்ரவர்த்திக்கு தாதாசாகேப் பால்கே விருது வழங்கப்படும் என மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் இன்று அறிவித்துள்ளார். "மிதுன் தாவின் குறிப்பிடத்தக்க சினிமாப் பயணம் தலைமுறையினருக்கு உத்வேகம் அளிக்கிறது! இந்திய சினிமாவுக்கு அவர் செய்த மகத்தான பங்களிப்பிற்காக பழம்பெரும் நடிகரான ஷ. மிதுன் சக்ரவர்த்தி ஜிக்கு விருது வழங்க தாதாசாகேப் பால்கே தேர்வு நடுவர் குழு முடிவு செய்துள்ளது என்பதை அறிவிப்பதில் பெருமை அடைகிறேன். அக்டோபரில் நடைபெறும் 70வது தேசிய திரைப்பட விருதுகள் விழாவில் வழங்கப்படும். 8, 2024," என்று அவர் X-இல் எழுதினார். முன்னதாக இந்த ஆண்டின் தொடக்கத்தில், மிதுன் சக்ரவர்த்தி இந்தியாவின் மூன்றாவது மிக உயர்ந்த குடிமகன் விருதான பத்ம பூஷன் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
Twitter Post
நக்சலைட் முதல் டாப் ஹீரோ வரை அவரின் பயணம்
மிதுன் சக்ரவர்த்தி கொல்கத்தாவில் பிறந்தவர். 1976 ஆம் ஆண்டு மிருகயா திரைப்படத்தில் நடிகராக அறிமுகமானார், இது அவருக்கு சிறந்த நடிகருக்கான தேசிய திரைப்பட விருதைப் பெற்றுத்தந்தது. பல ஆண்டுகளாக, மிதுன் தஹதர் கதா (1992) மற்றும் சுவாமி விவேகானந்தர் (1998) ஆகிய படங்களில் நடித்ததற்காக மேலும் இரண்டு தேசிய திரைப்பட விருதுகளைப் பெற்றார். சமீபத்தில், விவேக் அக்னிஹோத்ரி இயக்கிய தி காஷ்மீர் ஃபைல்ஸில் தோன்றினார். அவரது மகன் நமாஷி சக்ரவர்த்தி, பேட் பாய் படத்தில் பாலிவுட்டில் அறிமுகமானார். மிதுன் சக்ரவர்த்தி திரைப்பயணத்தை துவங்குவதற்கு முன்னர் நக்சலைட் போராளியாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.