Page Loader
"மே மாதத்தில் முதல் பாடல் வெளியீடு": GOAT அப்டேட்-ஐ வெளியிட்ட வெங்கட் பிரபு
GOAT படத்தின் முதல் பாடல், மே மாதத்தில் வெளியாகும்

"மே மாதத்தில் முதல் பாடல் வெளியீடு": GOAT அப்டேட்-ஐ வெளியிட்ட வெங்கட் பிரபு

எழுதியவர் Venkatalakshmi V
Mar 04, 2024
05:31 pm

செய்தி முன்னோட்டம்

விஜய் தற்போது இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில், 'GOAT' திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு 'லியோ' திரைப்படம் வெளிவருவதற்கு முன்னதாகவே துவங்கி விட்டது. இருப்பினும், படத்தை பற்றி பெரிதாக எந்த அறிவிப்பும் வரவில்லை. இதற்கிடையில், விஜய் அரசியலிலும் இறங்கி விட்டார். இந்த சூழலில், GOAT திரைப்படத்தை பற்றிய அப்டேட்டை இயக்குனர் வெங்கட் பிரபு வெளியிட்டுள்ளார். அதன்படி, படத்தின் அநேக படப்பிடிப்புகள் நிறைவடைந்து விட்டன. இன்னும் கிளைமாக்ஸ் கட்சியும், வெளிநாட்டில் படம்பிடிக்கவேண்டிய காட்சிகளும் மட்டும் மீதமுள்ளன. படத்தின் முதல் பாடல், மே மாதத்தில் வெளியாகும் என தெரிவித்துள்ளார். இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். படத்தின் CG வேலைகள் வெளிநாட்டிலும், இந்தியாவில் 2 கம்பனிகளும் செய்து வருகின்றன என அவர் தெரிவித்துள்ளார் .

ட்விட்டர் அஞ்சல்

GOAT அப்டேட்