
வைபவின் ரணம் படத்தை, தன் பாணியில் ரெவ்யூ செய்த வெங்கட் பிரபு
செய்தி முன்னோட்டம்
நடிகர் வைபவ்வின் 25வது படமான 'ரணம்' இன்று வெளியாகியுள்ள நிலையில், GOAT படப்பிடிப்பு தளத்தில் இருந்து இயக்குநர் வெங்கட் பிரபு அந்த படத்தை பற்றி பேசியுள்ள வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
வெங்கட் பிரபு, நடிகர் வைபவ் இருவரும் அவர்கள் பாணியில் ஜாலியாக உரையாடிய வீடியோவை, வெங்கட் பிரபு தன்னுடைய எக்ஸ் தளத்தில் பதிவேற்றியுள்ளார்.
அந்த பதிவில், தன்னுடைய 'சரோஜா' படம் மூலமாக அறிமுகமான வைபவ், குறுகிய காலத்தில் 25 படங்கள் நடித்துள்ளார் என்பது தனக்கு மிகவும் பெருமையான விஷயம் என கூறினார் வெங்கட் பிரபு.
அதோடு, வைபவை 'சென்னை-600028' திரைப்படத்திலேயே அறிமுகப்படுத்த திட்டமிட்டிருந்ததாகவும், ஆனால் அப்போது வைபவ் கால்ஷீட் கிடைக்காத காரணத்தால், அந்த ரோலில் ஜெய் நடித்தார் எனவும் தெரிவித்தார்.
ட்விட்டர் அஞ்சல்
ரணம் படத்தை ரெவ்யூ செய்த வெங்கட் பிரபு
#Watch | நடிகர் வைபவ்வின் 25வது படமான 'ரணம்' இன்று வெளியாகியுள்ள நிலையில், GOAT படப்பிடிப்பு தளத்தில் இயக்குநர் வெங்கட்பிரபு, நடிகர் வைபவ் ஜாலியாக உரையாடிக்கொள்ளும் காட்சி!#SunNews | #Ranam | #TheGOAT | @actor_vaibhav | @vp_offl pic.twitter.com/CfwA1qGHOC
— Sun News (@sunnewstamil) February 23, 2024
வைபவ்
வைபவின் 25வது திரைப்படம்
அந்த வீடியோவில் தன்னுடைய பாணியில் ரெவ்யூ செய்த வெங்கட் பிரபு, இந்த படத்தில் தானும் ஒரு கெஸ்ட் ரோலில் நடித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
அவரின் கதாபாத்திரம் படத்தின் முக்கியமான திருப்புமுனை பாத்திரம் எனவும் சிரித்திக்கொண்டே தெரிவித்தார்.
ரணம் திரைப்படம் ஒரு கிரைம் திரில்லர் பாணியில் உருவாகியுள்ளது என வைபவ் தெரிவித்தார்.
ரணம் திரைப்படத்தில் வைபவ்வுடன், தான்யா ஹோப், நந்திதா ஆகியோர் நடித்துள்ளனர்.
புதுமுகம் ஷெரிஃப் இப்படத்தை இயக்கியுள்ளார்.
இப்படத்தில், வைபவ் கதாபாத்திரம், ஒரு இணை இயக்குனராக இருந்து, முக புனரமைப்பு கலைஞராக மாறியவர். அவர் இறந்தவர்களின் சிதைந்த முகங்களை புனரமைப்பதோடு மட்டுமல்லாமல், போலீஸ் அதிகாரிகளுக்கான முழுமையற்ற விசாரணைகளை முடிக்கும் குற்றக் கதைகளையும் எழுதும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.