Loading...
'அப்பாவுக்கு முழுசா தெரியல, எஸ்கே என் தம்பி!' சிவகார்த்திகேயன் படம் கைவிடப்பட்டது பற்றி வெங்கட் பிரபு உருக்கம்
சிவகார்த்திகேயன் படம் கைவிடப்பட்டது பற்றி வெங்கட் பிரபு உருக்கம்

'அப்பாவுக்கு முழுசா தெரியல, எஸ்கே என் தம்பி!' சிவகார்த்திகேயன் படம் கைவிடப்பட்டது பற்றி வெங்கட் பிரபு உருக்கம்

எழுதியவர் Sekar Chinnappan
Sep 28, 2026
03:55 pm

செய்தி முன்னோட்டம்

இயக்குநர் வெங்கட் பிரபுவின் தந்தை கங்கை அமரன் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், தனது மகனின் அடுத்த படம் தாமதமாவதற்கு ஒரு பிரபல நடிகர் தான் காரணம் எனக் குற்றம் சாட்டியிருந்தார். "அமெரிக்கா சென்று கதையெல்லாம் தயார் செய்து கால்ஷீட் வாங்கிய பிறகு, அந்த நடிகர் தனது படம் ஹிட் அடித்ததால் வேறு இயக்குநருடன் சென்றுவிட்டார்." எனக் கூறியிருந்தார். அந்த நடிகர் சிவகார்த்திகேயன் தான் என இணையத்தில் ரசிகர்கள் பெரிய அளவில் விவாதிக்கத் தொடங்கினர்.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

எஸ்கே என் சகோதரர்

வெங்கட் பிரபுவின் உருக்கமான விளக்கம்

இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இயக்குநர் வெங்கட் பிரபு தனது எக்ஸ் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார்.

அதில், "சிவகார்த்திகேயன் என்னுடைய நெருங்கிய நண்பர் மற்றும் சகோதரர் போன்றவர்.

ஒரு தந்தையாக தனது மகனின் படம் தள்ளிப்போகும்போது விரக்தி ஏற்படுவது இயல்பு.

என் வேலை விஷயத்தில் நடக்கும் உண்மைகளை நான் அப்பா உள்ளிட்ட யாரிடமும் முழுமையாகப் பகிர்வதில்லை, அதனால் அவருக்கு முழு விவரமும் தெரியாது." எனக் குறிப்பிட்டுள்ளார்.

ADVERTISEMENT

பின்னணி

படம் கைவிடப்பட்டதற்கான பின்னணியும் வாழ்த்துகளும்

தொடர்ந்து பேசிய வெங்கட் பிரபு, "அந்தப் படம் பல்வேறு காரணங்களால் கைகூடவில்லை, அவ்வளவுதான்.

இதில் எனக்கு எந்தவித வருத்தமும் இல்லை. சரியான நேரமும், நல்ல கதையும் அமையும் போது நிச்சயம் நானும் சிவகார்த்திகேயனும் இணைந்து பணியாற்றுவோம்.

எனவே இந்த சர்ச்சைக்கு இத்துடன் முற்றுப்புள்ளி வையுங்கள்.

நான் எனது அடுத்த படத்தின் பணிகளில் பிஸியாக இருக்கிறேன். சிவகார்த்திகேயனின் சேயோன் படம் வெற்றிபெற வாழ்த்துகள்" எனத் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

ட்விட்டர் அஞ்சல்

Embed

ADVERTISEMENT