NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / சல்மான் கான் வீட்டின் மீது துப்பாக்கி சூடு நடத்திய மர்மநபர்கள் குஜராத்தில் கைது
    அடுத்த செய்திக் கட்டுரை
    சல்மான் கான் வீட்டின் மீது துப்பாக்கி சூடு நடத்திய மர்மநபர்கள் குஜராத்தில் கைது
    துப்பாக்கிச் சூடு நடத்திய இந்த இருவரையும், இன்று காலை மும்பைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தவுள்ளனர்

    சல்மான் கான் வீட்டின் மீது துப்பாக்கி சூடு நடத்திய மர்மநபர்கள் குஜராத்தில் கைது

    எழுதியவர் Venkatalakshmi V
    Apr 16, 2024
    08:26 am

    செய்தி முன்னோட்டம்

    பாலிவுட் நடிகர் சல்மான் கானின் வீட்டில் துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவத்தில் தொடர்புடைய இரு குற்றவாளிகளை, மும்பை குற்றப்பிரிவு போலீஸார் திங்கள்கிழமை, குஜராத்தில் உள்ள பூஜ் நகரில் கைது செய்தனர்.

    குற்றம் சாட்டப்பட்டவர்கள் பீகாரின் மேற்கு சம்பாரண் மாவட்டத்தில் உள்ள மசிஹியைச் சேர்ந்த விக்கி சாஹப் குப்தா, 24, மற்றும் சாகர் ஸ்ரீஜோகேந்திர பால், 21, என அடையாளம் காணப்பட்டனர்.

    சல்மான் கானின் வீட்டிற்கு வெளியே, துப்பாக்கிச் சூடு நடத்திய இந்த இருவரையும், இன்று காலை மும்பைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தவுள்ளனர்.

    கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5 மணியளவில் பாந்த்ராவில் உள்ள கேலக்ஸி அடுக்குமாடி குடியிருப்புக்கு வெளியே பைக்கில் வந்த இருவர், நான்கு ரவுண்டுகள் துப்பாக்கியால் சுட்டுவிட்டு, தப்பி ஓடிவிட்டனர்.

    கேங்க்ஸ்டர் தொடர்பு 

    தாக்குதலுக்கு பொறுப்பேற்ற லாரன்ஸ் பிஷ்னோயின் சகோதரர்

    துப்பாக்கிச் சூடு நடத்தியபிறகு, குற்றம் சாட்டப்பட்டவர்கள் தங்கள் பைக்கை ஒரு தேவாலயத்தின் அருகே விட்டுவிட்டு, சிறிது தூரம் நடந்து, பாந்த்ரா ரயில் நிலையம் சென்று பின்னர் குஜராத்திற்கு தப்பி சென்றுள்ளனர்.

    அந்த துப்பாக்கி சூட்டில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை எனினும், அது மும்பை வட்டாரத்தை பரபரப்பிற்கு உள்ளாகியுள்ளது.

    இந்த சம்பவத்திற்கு, லாரன்ஸ் பிஷ்னோயின் சகோதரர் அன்மோல் பிஷ்னோய், சமூக வலைதள பதிவில் பொறுப்பேற்றுள்ளார்.

    சிறையில் இருக்கும் கேங்க்ஸ்டர் லாரன்ஸ் பிஷ்னோய் மற்றும் தேடப்படும் கும்பல் கோல்டி ப்ரார் ஆகியோர் சல்மான் கானைக் கொல்வதாக பலமுறை அறிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    1998 பிளாக்பக் வேட்டை சம்பவத்தின் காரணமாக லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் சல்மான் கானை குறிவைத்து வருகிறது.

    பிளாக்பக்ஸ் பிஷ்னோய் சமூகத்தால் புனிதமானதாகக் கருதப்படுகிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சல்மான் கான்
    துப்பாக்கி சூடு
    குஜராத்
    பாலிவுட்

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    சல்மான் கான்

    'சிகந்தர்': சல்மான் கான்- ஏஆர் முருகதாஸ் இணையும் படத்தின் பெயர் வெளியீடு இயக்குனர்
    சல்மான் கான் வீட்டில் துப்பாக்கி சூடு எதிரொலி: பிரதமரிடம் வேண்டுகோள் விடுத்த சினிமா தொழிலாளர்கள் அமைப்பு துப்பாக்கி சூடு

    துப்பாக்கி சூடு

    பிபா மகளிர் உலகக்கோப்பை : கால்பந்து அணிகள் தங்கியிருந்த ஹோட்டலுக்கு அருகே துப்பாக்கிச் சூடு கால்பந்து
    ஜெய்ப்பூர்-மும்பை ரயிலில் ரயில்வே பாதுகாப்புப் படை கான்ஸ்டபிளால் 4 பேர் சுட்டுக் கொலை ரயில்கள்
    சென்னையில் பதற்றம் - என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட 2 ரவுடிகள்  சென்னை
    ஜெய்ப்பூர்-மும்பை ரயிலில் நடந்த துப்பாக்கி சூடு: உண்மையில் என்ன நடந்தது? மகாராஷ்டிரா

    குஜராத்

    அகமதாபாத்தில் 2026 காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளை நடத்த குஜராத் அரசு விருப்பம் காமன்வெல்த் விளையாட்டு
    காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியை நடத்துகிறோமா? குஜராத் அரசு விளக்கம் காமன்வெல்த் விளையாட்டு
    வட இந்தியாவில் தொடரும் கனமழை, வெள்ளம்: மின்னல் தாக்கி இருவர் பலி  மகாராஷ்டிரா
    அகமதாபாத் மருத்துவமனையில் தீ விபத்து: 100 நோயாளிகள் வெளியேற்றம்  அகமதாபாத்

    பாலிவுட்

    ஹ்ரித்திக் ரோஷன்- தீபிகா நடித்துள்ள ஃபைட்டர் திரைப்படத்தின் டீசர் வெளியானது படத்தின் டீசர்
    ஹாலிவுட் விருது பட்டியலில் இடம் பிடித்தது இயக்குநர் அட்லீயின் 'ஜவான்' திரைப்படம்  ஷாருக்கான்
    #தலைவர்170 திரைப்படத்தின் டீசர் வீடியோ மற்றும் டைட்டில் வெளியானது ரஜினிகாந்த்
    பாலிவுட் நடிகையும், நடிகை கஜோலின் தாயுமான தனுஜா, மருத்துவமனையில் அனுமதி நடிகைகள்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025