Page Loader
இன்னும் சில தினங்களில்; 'The GOAT' படத்தின் வேற லெவல் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு
'The GOAT' படத்தின் அப்டேட்

இன்னும் சில தினங்களில்; 'The GOAT' படத்தின் வேற லெவல் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு

எழுதியவர் Sekar Chinnappan
Aug 25, 2024
06:26 pm

செய்தி முன்னோட்டம்

நடிகர் விஜய் நடிப்பில் தயாராகியுள்ள 'The GOAT' திரைப்படத்திற்கான பணிகள் முடிந்து செப்டம்பர் 5ஆம் தேதி படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை, படத்தில் இருந்து மூன்று பாடல்கள் வெளிவந்துள்ளன. இந்த மூன்று பாடல்களும் மிகப்பெரிய வரவேற்பை பெறவில்லை. இந்நிலையில், இன்னும் சில தினங்களில் படத்தில் இருந்து புதிய பாடல் ஒன்று வெளியாக இருப்பதாக இயக்குனர் வெங்கட் பிரபு உறுதிப்படுத்தியுள்ளார். இந்தப் பாடலில் பல்வேறு பிரபலங்கள் பாடியுள்ளதாகக் கூறப்படும் நிலையில், இந்த பாடலில் விஜய்க்கு ஜோடியாக நடிகை த்ரிஷா நடனமாடுகிறார் என்ற ஒரு தகவலும் வெளியாகியுள்ளது. ஏற்கனவே வெளியான பாடல்களைப் போல் இல்லாமல் இது மிகப்பெரிய வரவேற்பைப் பெறும் என ரசிகர்கள் நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர்.

சென்சார் 

படத்திற்கு சென்சார் போர்டு சான்றிதழ்

படத்தின் பாடல் குறித்த அப்டேட் வெளியாகியுள்ள நிலையில், படத்தின் சென்சார் போர்டு சான்றிதழ் குறித்த தகவல்களும் வெளியாகி சோசியல் மீடியாவில் ரவுண்டு கட்டி வருகின்றன. படத்தின் நீளம் 179 நிமிடங்கள் என்றும், சென்சார் போர்டு யு/ஏ சான்றிதழ் கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், படத்தில் இடம்பெற்றுள்ள சில ஆக்ரோஷமான வசனங்களை மியூட் செய்யவும், ஒரு சில காட்சிகளை கட் செய்யவும் சென்சார் போர்டு உத்தரவிட்டுள்ளது. சில காட்சிகளை நீக்குவதன் மூலம், சென்சார் போர்டுக்கு சமர்ப்பிக்கப்பட்ட படத்தின் நீளத்தில் 5 வினாடிகள் மட்டும் வெட்டப்பட்டுள்ளது. மேலும், முக்கிய தகவலாக படத்தின் இறுதியில் 3.5 நிமிடங்கள் படத்தின் ப்ளூப்பர் காட்சிகள் இடம் பெற்றுள்ளதாகத் தெரிகிறது.