
அவதூறு சர்ச்சை: கொதித்தெழுந்த த்ரிஷா; சட்டரீதியாக நடவடிக்கை பாயும் என அறிவிப்பு
செய்தி முன்னோட்டம்
நடிகை த்ரிஷா குறித்து அதிமுகவில் இருந்து சமீபத்தில் நீக்கப்பட்ட பிரமுகரான ஏ.வி.ராஜூ அவதூறாக பேசியிருந்த வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.
திரையுலகினர், பொதுமக்கள் என பலரும் இதை கண்டித்த நிலையில், அவர் மீது சட்டபூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று நடிகை த்ரிஷா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக த்ரிஷா தன்னுடைய எக்ஸ் தளத்தில் பதிவிட்டதன்படி,"கவனம் பெறுவதற்காக எந்த நிலைக்கும் கீழே இறங்கும் கீழ்த்தரமான மனிதர்களையும் கேவலமான மனிதர்களையும் திரும்பத் திரும்பப் பார்ப்பது அருவருப்பாக உள்ளது. இது தொடர்பாக தேவையான மற்றும் கடுமையான நடவடிக்கை உறுதியாக மேற்கொள்ளப்படும். இனிமேல் சொல்ல வேண்டிய மற்றும் செய்ய வேண்டிய அனைத்துமே எனது சட்டத் துறையிலிருந்துதான்." என்று பதிவிட்டுள்ளார்.
ட்விட்டர் அஞ்சல்
திரிஷாவின் பதில்
It's disgusting to repeatedly see low lives and despicable human beings who will stoop down to any level to gain https://t.co/dcxBo5K7vL assured,necessary and severe action will be taken.Anything that needs to be said and done henceforth will be from my legal department.
— Trish (@trishtrashers) February 20, 2024