'சினிமாவை விட்டு விலகுகிறேனா?': வதந்திகளுக்கு த்ரிஷா கொடுத்த தரமான பதிலடி!
செய்தி முன்னோட்டம்
திரையுலகில் பல தசாப்தங்களாக தனது ஆதிக்கத்தை செலுத்தி வரும் நடிகை த்ரிஷா, சமீபகாலமாக தனது திருமணம் மற்றும் திரைப்பயணம் குறித்து வெளியாகும் வதந்திகளுக்கு தனது பாணியில் பதிலடி கொடுத்துள்ளார். குறிப்பாக, தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் மற்றும் த்ரிஷா இடையேயான உறவு குறித்து சமூக வலைதளங்களில் பரவி வரும் செய்திகள் கோலிவுட் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன. இந்த நிலையில் பிரபல சினிமா நடிகரும், திரைப்பட விமர்சகருமான சித்ரா லக்ஷ்மணன் தனது யூட்யூப் சேனலில் த்ரிஷா திரைவாழ்க்கையிலிருந்து ஓய்வு பெற திட்டமிட்டுள்ளதாக கூறினார். நேற்று இந்த செய்தி வைரலாக பரவிய நிலையில் திரிஷாவின் இந்த பதிவு வந்துள்ளது. இது அவரின் ரசிகர்களுக்கு நிம்மதியை அளித்துள்ளது.
ஓய்வு
சினிமாவுக்கு முழுக்கு போடுகிறாரா த்ரிஷா?
நடிகரும் பத்திரிகையாளருமான சித்ரா லட்சுமணன் தனது யூடியூப் சேனலில், த்ரிஷா புதிய படங்கள் எதிலும் ஒப்பந்தமாகவில்லை என்றும், அவர் விரைவில் சினிமாவில் இருந்து விலக வாய்ப்புள்ளதாகத் தயாரிப்பாளர்கள் தரப்பில் கூறப்படுவதாகவும் தெரிவித்திருந்தார். இது த்ரிஷாவின் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 2025-ஆம் ஆண்டில் 'விடாமுயற்சி', 'குட் பேட் அக்லி' போன்ற பெரிய படங்களில் நடித்த த்ரிஷா, திடீரென விலகுவதாக வந்த செய்தி காட்டுத்தீயாகப் பரவியது.
பதிலடி
"கற்பனைக்கு ஒரு அளவு இல்லையா?" - த்ரிஷாவின் பதிலடி
இந்த வதந்திகளைக் கண்டு கொதித்தெழுந்த த்ரிஷா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிண்டலான ஒரு பதிவைப் பகிர்ந்துள்ளார். அதில், "நான் சினிமாவில் இருந்து விலகிவிட்டேன், ஒரு பெரிய தொழிலதிபரைத் திருமணம் செய்து கொண்டேன், எனக்கு நான்கு குழந்தைகள் உள்ளனர், அவர்களுக்கு நேற்றுதான் இரண்டாவது பிறந்தநாள் முடிந்தது! இன்று உங்களின் கற்பனை ஒதுக்கீடு (Fiction Quota) முடிந்துவிட்டதா அல்லது இன்னும் ஏதாவது சேர்க்க வேண்டுமா?" என்று காட்டமாகக் கேட்டுள்ளார். இதன் மூலம் தான் தொடர்ந்து சினிமாவில் நீடிப்பதை அவர் உறுதி செய்துள்ளார்.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
She addressed all the rumors , except one. Why 🤔 pic.twitter.com/Fcp1QG1k5H
— NoturEx (@ExNotur) April 7, 2026
விஜய்
விஜய் - த்ரிஷா விவகாரமும் கிளம்பிய சர்ச்சைகளும்
த்ரிஷாவின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்துத் தொடர்ந்து வதந்திகள் பரவி வருகிறது. அதேசமயம், விஜய்யின் மனைவி சங்கீதா அவரிடமிருந்து விவாகரத்து கோரியுள்ளார். அதில் விஜய்க்கும் ஒரு நடிகைக்கும் திருமணம் தாண்டிய உறவு இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளதாக செய்தி வெளியானது. அந்த நிலையில்தான் கடந்த மார்ச் மாதம் சென்னையில் நடைபெற்ற ஒரு திருமண விழாவில் விஜய்யும் த்ரிஷாவும் ஒரே மாதிரியான உடையில் (Matching Outfits) கலந்துகொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகின. சங்கீதாவின் விவாகரத்து கோரிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது திரிஷா தான் என பலரும் யூகித்து செய்தி வெளியிட்டபோதும் திரிஷா மௌனம் காத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.