NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / நடிகர் அஜித்தின் ரேஸ் காரில் SDAT லோகோ! நன்றி கூறி வாழ்த்து தெரிவித்த உதயநிதி
    அடுத்த செய்திக் கட்டுரை
    நடிகர் அஜித்தின் ரேஸ் காரில் SDAT லோகோ! நன்றி கூறி வாழ்த்து தெரிவித்த உதயநிதி
    நடிகர் அஜித்தின் ரேஸ் காரில் SDAT லோகோ!

    நடிகர் அஜித்தின் ரேஸ் காரில் SDAT லோகோ! நன்றி கூறி வாழ்த்து தெரிவித்த உதயநிதி

    எழுதியவர் Venkatalakshmi V
    Oct 30, 2024
    08:22 am

    செய்தி முன்னோட்டம்

    நடிகர் அஜித், கார் ரேஸிங்கில் அதிக ஈடுபாடு கொண்டவர் என்பது பலரும் அறிந்ததே.

    திரைப்படங்களில் நடித்தாலும் அவரது முதல் காதல் கார் ரேஸிங் மற்றும் பைக் ரேஸிங் தான். ஏற்கனவே சில காலம் முன்பு ஃபார்முலா கார் ரேசிங்கில் அவர் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.

    தற்போது அவர் தனியாக ஒரு கார் ரேஸிங் அணியை உருவாக்கி துபாயில் நடைபெறவுள்ள கார் ரேஸ் பந்தயத்தில் கலந்துகொள்ள உள்ளார்.

    நேற்று அவர் அணியினருடன் பயிற்சியில் ஈடுபட்ட வீடியோ வெளியானது.

    இதனையடுத்து தமிழக துணை முதல்வரும், விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி அவரை வாழ்த்தி ஒரு பதிவை X பக்கத்தில் வெளியிட்டார்.

    Embed

    Twitter Post

    உலக அளவில் சிறப்புக்குரிய 24H Dubai 2025 & The European 24H Series Championship - Porsche 992 GT3 Cup Class கார் பந்தயத்தில் பங்கேற்கவுள்ள நடிகரும், நண்பருமான திரு.அஜித்குமார் சார் அவர்களுக்கு எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். நம்முடைய @SportsTN_ (SDAT)... pic.twitter.com/VQbZWdelPz— Udhay (@Udhaystalin) October 29, 2024

    SDAT லோகோ 

    தமிழக விளையாட்டுத்துறை லோகோவை காட்சிப்படுத்தும் அஜித் 

    அமைச்சர் உதயநிதி தனது பதிவில், அஜித்தின் 'அஜித்குமார் ரேசிங்' யூனிட்டின், கார், ஹெல்மெட் மற்றும் பந்தயம் தொடர்பான உபகரணங்களில் தமிழக விளையாட்டுத்துறையின் லோகோ காட்சிப்படுத்தப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

    மேலும், மிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டுத்துறையை உலக அரங்கில் பெருமைப்படுத்தி, ஊக்குவித்துள்ள அஜித்த்திற்கு தனது நன்றிகளையும் அவர் தெரிவித்தார்.

    அதே பதிவில், சென்னையில் சமீபத்தில் நடைபெற்ற Formula4 Chennai Racing Street Circuit போன்ற முன்னெடுப்புகளுக்கு அஜித்தின் ஆதரவுக்கும் நன்றி கூறி, அவரின் கார் பந்தயத்திற்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.

    நடிகர் அஜித் மற்றும் அவரது அணியினர் 24H துபாய் 2025 மற்றும் போர்ஷே 992 GT3 கோப்பை வகுப்பில் ஐரோப்பிய 24H தொடர் சாம்பியன்ஷிப்பில் பங்கேற்கிறார்கள்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    நடிகர் அஜித்
    உதயநிதி ஸ்டாலின்
    உதயநிதி ஸ்டாலின்

    சமீபத்திய

    மாணவர்கள் கவனத்திற்கு, SSLC மற்றும் பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு பொதுத்தேர்வு
    முதன்முறையாக, தாலிபான் வெளியுறவுத்துறை அமைச்சரிடம் பேசிய இந்தியா வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் எஸ்.ஜெய்சங்கர்
    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ

    நடிகர் அஜித்

    KH234 படத்தில் முதல் முறையாக இணையும் திரிஷா, நயன்தாரா கமலஹாசன்
    கரகாட்டக்காரன் உள்ளிட்ட பல படங்களில் நடித்த நடிகர் ஜூனியர் பாலையா காலமானார் தமிழ் திரைப்படம்
    லியோ வெற்றி விழா- நடிகர் விஜய் சொன்ன குட்டி ஸ்டோரி என்ன? லியோ
    தமிழின் இந்த வார திரையரங்க மற்றும் ஓடிடி வெளியீடுகள்  விஜய்

    உதயநிதி ஸ்டாலின்

    'உதயநிதி ஸ்டாலின் பேசியதை நீதிமன்ற அவமதிப்பாக கருத முடியாது' - உச்சநீதிமன்றம்  அறநிலையத்துறை
    மிஸ்கின் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் 'ட்ரெயின்' திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது விஜய் சேதுபதி
    கனமழை எதிரொலி - தென்மாவட்டங்களுக்கு விரையும் உதயநிதி ஸ்டாலின்   கனமழை
    திருநெல்வேலி மக்களை நேரில் சந்தித்து நிவாரண பொருட்களை வழங்கிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி திருநெல்வேலி

    உதயநிதி ஸ்டாலின்

    மீட்பு பணிகள் குறித்து விமர்சித்தவர்களுக்கு, இயக்குனர் மாரி செல்வராஜ் நெத்தியடி உதயநிதி ஸ்டாலின்
    இந்திக்காரர்கள் குறித்து தயாநிதி மாறன் பேசிய விவகாரம்: ராகுல் காந்தியை கடுமையாக சாடினார் பிஆர்எஸ் தலைவர் கே.கவிதா காங்கிரஸ்
    கேப்டன் விஜயகாந்த் மரணம்: முதல்வர் ஸ்டாலின் முதல் பிரதமர் மோடி வரை இரங்கல் விஜயகாந்த்
    72 குண்டுகள் முழங்க அரசு மரியாதை - விஜயகாந்த் உடல் நல்லடக்கம்  விஜயகாந்த்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025