
KH 233: கமல்ஹாசனை இயக்க போகும் ஹெச்.வினோத்
செய்தி முன்னோட்டம்
இயக்குனர் ஹெச்.வினோத் கடைசியாக நடிகர் அஜித்தை வைத்து 'துணிவு' திரைப்படத்தை இயக்கினார். படம் அமோக வெற்றியடைந்ததை தொடர்ந்து, அவர் கமல்ஹாசனுடன் இணையவுள்ளார் என செய்திகள் வெளியான வண்ணம் இருந்தது.
ஒரு பேட்டியின் போதும் கூட, வினோத், உலகநாயகனிடம் ஒரு கதை கூறி உள்ளதாக தெரிவித்திருந்தார்.
இதனை தொடர்ந்து சில நாட்களுக்கு முன்னர், நெல் ஜெயராமன் பாரம்பரிய நெல் பாதுகாப்பு மையத்தினருடன் ஒரு கலந்துரையாடல் நடைபெற்றது. அதில் நடிகர் கமல்ஹாசனுடன், இயக்குனர் வினோத்தும் உடனிருந்தார்.
அப்போதே, ஊடங்களாலும், ரசிகர்களும், இவர்கள் இருவரின் கூட்டணி உறுதியானது எனவும், இது விவசாயத்தை சம்மந்தப்பட்ட திரைப்படமாக இருக்கும் எனவும் யூகிக்க தொடங்கினர்.
அதை உறுதிப்படுத்தும் விதமாக, தற்போது அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
KH 233 திரைப்படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு
And it begins…#RKFI52 #KH233
— Kamal Haasan (@ikamalhaasan) July 4, 2023
#RISEtoRULE #HVinoth #Mahendran @RKFI @turmericmediaTM @magizhmandram pic.twitter.com/7cej87cghE