Loading...
The Mummy 4 படத்தின் அதிகாரப்பூர்வ தலைப்பு வெளியீடு: 'The Mummy: Book of the Dead' அடுத்த ஆண்டு ரிலீஸ்
The Mummy 4 படத்தின் அதிகாரப்பூர்வ தலைப்பு வெளியீடு

The Mummy 4 படத்தின் அதிகாரப்பூர்வ தலைப்பு வெளியீடு: 'The Mummy: Book of the Dead' அடுத்த ஆண்டு ரிலீஸ்

எழுதியவர் Venkatalakshmi V
Oct 16, 2026
02:09 pm

செய்தி முன்னோட்டம்

ஹாலிவுட்டின் புகழ்பெற்ற சாகச திரைப்படமான 'தி மம்மி' வரிசையில் நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட நான்காம் பாகத்தின் அதிகாரப்பூர்வத் தலைப்பை யுனிவர்சல் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி, இப்படத்திற்கு 'The Mummy: Book of the Dead' எனப் பெயரிடப்பட்டுள்ளதுடன், படம் உலகளாவிய திரையரங்குகளில் வரும் 2027-ஆம் ஆண்டு அக்டோபர் 15-ஆம் தேதி வெளியாகும் என்றும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ரீ-என்ட்ரி

நட்சத்திரங்களின் பிரம்மாண்ட ரீ-என்ட்ரி

இப்படத்தின் மூலம் உலகெங்கிலும் உள்ள ரசிகர்களின் ஃபேவரைட் ஜோடியான ஆஸ்கார் விருது வென்ற பிரெண்டன் ஃபிரேசர் மற்றும் ரேச்சல் வீஸ் ஆகியோர் மீண்டும் ரிக் மற்றும் ஈவி ஓ'கன்னல் கதாபாத்திரங்களில் இணைந்து நடிக்கின்றனர்.

இவர்களுடன் முதல் பாகங்களில் கலக்கிய ஜான் ஹன்னா, கெவின் ஜே. ஓ'கானர் மற்றும் ஆர்தத் பே கதாபாத்திரத்தில் நடிக்கும் ஒடெட் ஃபீர் ஆகியோருடன் மைக்கேல் ஜான்ஸ்டன் மற்றும் நுமான் அகார் போன்ற புதிய நடிகர்களும் இணைந்துள்ளனர்.

'Radio Silence' பிரபல இயக்குநர்களான மேட் பெட்டினெல்லி-ஒல்பின் மற்றும் டைலர் கில்லெட் இணைந்து இப்படத்தை இயக்குகின்றனர். டேவிட் கோக்கஷால் திரைக்கதை எழுதியுள்ளார்.

கதைக்களம்

'புக் ஆஃப் தி டெட்' தலைப்பு உணர்த்தும் கதைக்களம்

படத்தின் தலைப்பே ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

1999-ஆம் ஆண்டு வெளியான முதல் பாகத்தில் இறந்தோரை எழுப்பவும், உலகை மிரட்டவும் பயன்படுத்தப்பட்ட பழங்கால எகிப்திய நூலான 'புக் ஆஃப் தி டெட்' தலைப்பாக வந்துள்ளதால், இம்முறை மீண்டும் இம்தோதெப் அல்லது கொடிய சக்திகளுக்கு எதிரான மிரட்டலான சாகசம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

லண்டன் மற்றும் மொராக்கோ போன்ற பகுதிகளில் கடந்த செப்டம்பர் மாதம் தொடங்கிய இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT