Page Loader
தி கோட் படத்தின் ரயில் விபத்து மினியேச்சர் காட்சி; வைரலாகும் வீடியோ
தி கோட் படத்தின் ரயில் விபத்து மினியேச்சர் காட்சி

தி கோட் படத்தின் ரயில் விபத்து மினியேச்சர் காட்சி; வைரலாகும் வீடியோ

எழுதியவர் Sekar Chinnappan
Sep 07, 2024
08:14 pm

செய்தி முன்னோட்டம்

நடிகர் விஜய் நடிப்பில் தயாரான தி கோட் திரைப்படம் வியாழக்கிழமை (செப்டம்பர் 5) உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. விஜய் தந்தை மற்றும் மகன் என இரட்டை வேடத்தில் நடித்துள்ள இந்த படத்தில் பிரஷாந்த், பிரபுதேவா, மோகன், சினேகா மற்றும் லைலா உள்ளிட்ட பல மூத்த நடிகர்களும் நடித்துள்ளனர். படத்தில் விஜய்க்கு ஜோடியாக மீனாட்சி சவுத்ரி நடித்துள்ள நிலையில், யுவன் ஷங்கர் ராஜா படத்திற்கு இசையமைத்துள்ளார். வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவான இந்த படத்தை ஏஜிஎஸ் புரடக்ஷன்ஸ் சார்பில் அர்ச்சனா கல்பாத்தி தயாரித்துள்ளார். படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், படத்தில் இடம்பெறும் ரயில் விபத்தின் மினியேச்சர் காட்சிகளை இன்ஸ்டாகிராமில் கலாட்டா மீடியா வெளியிட்டுள்ளது.

வசூல்

படத்தின் இரண்டாம் நாள் வசூல்

தி கோட் திரைப்படம் அதன் பாக்ஸ் ஆபிஸ் வசூலில் இரண்டாவது நாளில் குறிப்பிடத்தக்க வீழ்ச்சியைக் கண்டது. இண்டஸ்ட்ரி டிராக்கர் சாக்னில்க் வெளியிட்ட ஆரம்ப மதிப்பீடுகளின்படி, வியாழன் அன்று இந்தியாவில் வலுவான ரூ 44 கோடியை வசூலித்த படம், இரண்டாம் நாளில் அனைத்து மொழிகளிலும் சேர்த்து ரூ 24.75 கோடி மட்டுமே வசூல் செய்தது. இரண்டு நாட்களில் படத்தின் மொத்த வசூல் 68.75 கோடி ரூபாய். மறுபுறம், தி கோட் வெளிநாட்டு சந்தையில் மிகவும் சிறப்பாக செயல்படுகிறது. வெள்ளியன்று இப்படம் இரண்டு நாட்களில் ரூ.72 கோடி வசூல் செய்துள்ளது. இப்படம் இரண்டு நாட்களில் உலகம் முழுவதும் ரூ.155 கோடி வசூலித்துள்ளது. இதன் தொடக்க வார இறுதியில் ரூ.275 கோடியை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.