Page Loader
வெங்கட் பிரபு பிறந்தநாள்- #தளபதி68 அப்டேட் உடன் பிறந்தநாள் வாழ்த்து கூறிய அர்ச்சனா கல்பாத்தி
இயக்குனர் வெங்கட் பிரபு இன்று தனது 48வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார்.

வெங்கட் பிரபு பிறந்தநாள்- #தளபதி68 அப்டேட் உடன் பிறந்தநாள் வாழ்த்து கூறிய அர்ச்சனா கல்பாத்தி

எழுதியவர் Srinath r
Nov 07, 2023
12:29 pm

செய்தி முன்னோட்டம்

பின்னணி பாடகர், நடிகர், இயக்குனர் என பன்முகத் தன்மை கொண்டவரும், கங்கை அமரனின் மகனுமான வெங்கட் பிரபு, இன்று தனது 48வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். ரசிகர்கள், சினிமா பிரபலங்கள் என பலரும் வெங்கட் பிரபுவுக்கு வாழ்த்து கூறி வரும் நிலையில், தளபதி68 திரைப்படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி கூறிய வாழ்த்து கவனம் ஈர்த்துள்ளது. மாநாடு திரைப்படத்திற்கு பின் இயக்குனர் வெங்கட் பிரபு, விஜயை வைத்து தளபதி68 என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்தின் படப்பிடிப்பு தாய்லாந்தில் தற்போது நடைபெற்று வருவதும், இதற்காக நடிகர் விஜய் கடந்த வாரம் தாய்லாந்து சென்று இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

2nd card

தாய்லாந்தில் படமாக்கப்படும் பெரும் ஆக்சன் காட்சிகள்

இதற்கிடையே வெங்கட் பிரபுவின் பிறந்தநாளை முன்னிட்டு, தளபதி68 திரைப்படத்தின் அப்டேட் உடன் அர்ச்சனா கல்பாத்தி அவருக்கு ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். "பைத்தியக்காரத்தனமான மேதைக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். எல்லாவற்றிலும் சிறப்பானது உங்களுக்கு கிடைக்க என் வாழ்த்துக்கள்" "#Thalapathy68 இன் இன்னும் பல கிரேஸி ஷூட்டிங் நாட்கள் மற்றும் அட்டவணைக்கு(அப்டேட்-மிகப்பெரிய ஆக்சன் காட்சிகள் தாய்லாந்தில் படமாக்கப்பட்டுள்ளது". "நேற்று இரவு படப்பிடிப்பு நடந்ததால், இயக்குனர் வெங்கட் பிரபுவுக்கு பிறந்தநாள் அன்று விடுமுறை வழங்கப்படுகிறது" என அவர் பதிவிட்டிருந்தார். வெங்கட் பிரபுவுக்கு பிறந்தநாள் வாழ்த்து உடன், தளபதி68 குறித்த அப்டேட்டும் வெளியானதால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

ட்விட்டர் அஞ்சல்

வெங்கட் பிரபுவுக்கு, அர்ச்சனா கல்பாத்தி பிறந்தநாள் வாழ்த்து